ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் பற்றி அறிந்ததும், அறியாததும்!!

ரோல்ஸ் ராய்ஸ் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரையிலான முக்கிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்

By Azhagar

விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமாக துவங்கப்பட்டு இன்று கார் தயாரிப்பில் கோலோய்ச்சி வரும் இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

கார் மற்றும் விமானத்தின் எஞ்சின்களை தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை 1906ம் ஆண்டில் சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ் மற்றும் ஃபெரட்ரிக் ஹென்றி ராய்ஸ் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கினர்.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

1906ம் தொடக்கத்திலேயே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், ஸில்வர் கோஸ்ட் என்ற தனது முதல் காரை அறிமுகப்படுத்தியது. அந்த கார் 24,000 கிலோ மீட்டர்கள் நிற்காமல் ஓடி புதிய சாதனை படைத்தது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

1971ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இங்கிலாந்தின் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டது. பின்னர், 2 ஆண்டுகள் கழித்து கார் உற்பத்தி பிரிவை ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார்ஸ் என மாற்றியப்பட்டது. 1987ம் ஆண்டிற்கு மேல் தனியார் நிறுவனமாக மாறிய ரோல்ஸ் ராய்ஸ், அதுவரை தேசியமயமாக்கப்பட்ட நிறுவனமாகவே செயல்பட்டது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

ஆரம்பக் காலம் தொட்டு ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் தயாரித்த ஏற்குறையை 65 சதவீதம் கார்கள் இன்றும் சாலைகளில் நல்ல கண்டிஷனில் ஓடுகின்றன என்பது வியப்பான உண்மை.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

1980ம் ஆண்டுவரை இங்கிலாந்தில் ஸ்டீல் உற்பத்தியில் பிரபலமாக இருந்த விக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் வசமிருந்த ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார்ஸை 1998ம் ஆண்டில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் விலைக்கு வாங்கியது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற நடந்த வியாபாரத்தில் பி.எம்.டபுள்யூவிற்கு சரிநிகர் போட்டியாக வோக்ஸ்வேகன் நிறுவனமும் பங்கெடுத்தது. பி.எம்.டபுள்யூவை விட வோக்ஸ்வேகன் தான் ரோல்ஸ்-ராய்ஸை விலைக்கு வாங்க அதிக விலையையும் மோற்கொள்ளிட்டுயிருந்தது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

ஆனால் ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார்ஸுடன் ஏற்கனவே இருந்த சில ஒப்பந்தங்கள் காரணமாக ரோல்ஸ்-ராய்ஸ் , பிஎம்டபிள்யூ வசமானது. அதற்கு பிறகு பி.எம்.டபுள்யூ ரோல்ஸ் ராய்ஸிற்கான கார்களை மட்டும் உருவாக்க இங்கிலாந்தின் குட்வுட் பகுதியில் தனிதொழிற்சாலையை கட்டமைத்தது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

2003ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் காரை தனது முதல் ரோல்ஸ் ராய்ஸின் படைப்பாக பிஎம்.டபுள்.யூ அறிமுகம்செய்தது. உலகளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த ஃபான்டம் கார், வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 44 ஆயிரம் வண்ணங்களில் தேர்வு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

ரோல்ஸ்- ராயிஸின் ஃபான்டம் கார் அனைத்தும் ஜெர்மனியில் தான் தயாரிக்கப்பட்டன. அதற்காக கட்டமைக்கப்பட்ட தொழிற்சாலையில் அலுமினிய பாகங்களை தயாரிக்க 200 பிரிவுகளும், கலவை பாகங்களை கைகளால் தயாரிக்க 300 பிரிவுகளும் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஒரு ஃபான்டம் காரை உருவாக்க குறைந்தது 2 மாதங்களாவது தொழிலாளர்களுக்கு தேவைப்பட்டது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

பி.எம்.டபுள்யூ கீழ் வெளியான ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்டம் கார் வி-12 எஞ்சினை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த எஞ்சின் 0விலிருந்து 100 கிலோ.மீட்டரை வெறும் 5.9 நொடிகளில் அடையும் பவரை தர வல்லது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

காரின் முன்பு இடம்பெறும் ஆபரணமான The Spirit of Ecstasy 1911ம் ஆண்டில் ஸ்கைஸ் என்ற சிற்ப கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. எல்லா மேஸ்காட் போலவே முதலில் சாதரணமாக இடம்பெற்றிருந்த The Spirit of Ecstasy, கால மாற்றத்தால், ரிமோர்ட் கண்ட்ரோல் கொண்டு இயக்கப்படுவதுமாகவும் தானகவே காரின் போனெட்டில் தோன்றுவது போலவும் வடிவமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

ஃபான்டம் காரின் அனைத்து மாடல்களிலும், ஒரு குடை வைக்கப்பட்டு இருக்கும், டைஃப்லானில் தயாரிக்கப்பட்ட இந்த குடை உரிமையாளருக்கான இருக்கையின் கதவினுள் பொருத்தப்பட்டு இருக்கும். ஒருமுறை கதவை திறந்தால் குடை தானாக கைக்கு அடக்கமாக வெளியே வரும். இது ஃபான்டம் காரின் தனிச்சிறப்புகளின் ஒன்று

 ரோல்ஸ் ராய்ஸ்- தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்

ஃபான்டம் காருக்காக முற்றிலும் லெதரால் செய்யப்படும் இருக்கைகள் உயர் ரக லெதரால் உருவாக்கப்படுபவை, 75 சதுர மீட்டர் லெதரைக் கொண்டு உருவாகும் இருக்கைக்கான கவர்கள், 17 நாட்கள் தயாரிக்கப்படும்.

Tesla S மாடல் காரின் புதிய படங்கள்

Most Read Articles
English summary
Rolls-Royce Ltd was a car and airplane engine manufacturing company founded in 1906 by Charles Stewart Rolls and Frederick Henry Royce
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X