மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முதன்மையாக தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், மாருதி சியாஸ் காரால் ஹோண்டா சிட்டி காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விற்பனையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அதன் சிறப்பம்சங்கள், விலை விபரங்களும் வெளியிடப்பட்டன. அதனை விரிவாக இந்த செய்தியில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்டு 2017 மாடலாக புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஹோண்டா சிட்டி கார் எஸ், எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என 5 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிப்புறத்தை பொறுத்தவரையில், எல்இடி ஹெட்லைட்டுகளும், எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய க்ரில் அமைப்பும் மிக முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன. முன்பைவிட கூர்மையான அமைப்புடன் பம்பர் டிசைன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பக்கவாட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. புதிய 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது மிகவும் கவர்ச்சியான, காஸ்ட்லியான கார் தோற்றத்தை ஹோண்டா சிட்டிக்கு வழங்குகிறது. கூரையின் டிசைனில் சிறிய மாற்றங்களுடன் தாழ்வாக தெரிகிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. பூட் ரூம் மூடியின் மேல் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி ஸ்டாப் லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தை பொறுத்தவரையில் புதிய 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 1.5 ஜிபி மெமரியும் உள்ளது. ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன் மூலமாக வாய்ஸ் கமான்ட் எனப்படும் குரல் வழி கட்டுப்பாட்டு வசதியையும் எளிதாக பெறலாம். உயர் வேரியண்ட்டுகளில் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. காரின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை ஓட்டுனர் பெறுவதற்கான மல்டி இன்ஃபர்மேஷன் எல்சிடி திரை பொருத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் ஆக்சிலரேட்டரை மிதிக்காமல் ஒரே சீரான வேகத்தில் காரை செலுத்தும் வசதியை அளிக்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரியர் ஏசி வென்ட்டுக்கு தொடு உணர் பட்டன் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருளில் தானாக ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், மழை நேரத்தில் தானாக இயங்கும் ஆட்டோமேட்டிக் வைப்பர் வசதிகளும் உள்ளன.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. புதிய ஹோண்டா சிட்டி காரில் 118 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்க 25.6 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் டாப் வேரியண்ட்டில் 6 உயிர் காக்கும் காற்றுப் பைகள் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தை இருக்கையை பொருத்திக் கொள்வதற்கு ஐசோஃபிக்ஸ் என்ற உயர் பாதுகாப்பு வசதி கொண்ட பொருத்தும் அமைப்பும் இடம்பெற்று இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் ஆற்றலை சீராக அனுப்பும் இபிடி நுட்பமும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி கார் மெட்டாலிக் சில்வர் என்ற புதிய வண்ணம் உள்பட 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் விலை விபரம்

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை விபரங்களை கீழே காணலாம்.

பெட்ரோல் வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை[டெல்லி]
எஸ் வேரியண்ட் ரூ. 8,49,990
எஸ்வி வேரியண்ட் ரூ.9,53,990
வி வேரியண்ட் ரூ.9,99,990
வி [சிவிடி மாடல்] ரூ.11,53,990
விஎக்ஸ் வேரியண்ட் ரூ. 11,64,990
விஎக்ஸ்[சிவிடி மாடல்] ரூ.12,84,990
இசட்எக்ஸ்[சிவிடி மாடல்] ரூ.13,52,990
டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடலின் விலை விபரங்களை கீழே காணலாம்.

டீசல் வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை[டெல்லி]
எஸ்வி வேரியண்ட் ரூ.10,75,990
வி வேரியண்ட் ரூ.11,55,990
விஎக்ஸ் வேரியண்ட் ரூ.12,86,990
இசட்எக்ஸ் வேரியண்ட்] ரூ.13,56,990

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

இன்று விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles
English summary
2017 Honda City Launched In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X