இந்தியாவில் ரூ.11,000 ஆரம்ப விலையில் ஹூண்டாய் எக்ஸெண்ட் காரின் முன்பதிவு தொடக்கம்

Written By:

ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட எக்ஸெண்ட் மாடல் காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. முற்றிலும் புதிய வெர்ஷனில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரை முன்பதிவு செய்ய ரூ.11,000 ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸண்ட் காரை ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 மாடலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. காரின் புகைப்போக்கி குழாய், புகைப்படிந்த தோற்றத்தில் இருக்கும் எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் பகிலிலும் எரியக்கூடிய விளக்குகள் என பல புதுமையான வடிவமைப்புகள் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் காரின் பின் பகுதியில் இருக்கக்கூடிய விளக்குளும் புதுமையான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

கிராண்ட் ஐ10 காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் எக்ஸ்ண்ட் காரிலும் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எரிவாயூகளிலும் இயங்கக்கூடிய வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் கொண்டு இயங்கும் எஞ்சின் 71 பி.எச்.பி பவர் மற்றும் டீசலில் இயங்கும் எஞ்சின் 75 பி.எச்.பி பவரை வழங்கும். மேலும் 1.1 லிட்டர் கொண்டு இயங்கும் எக்ஸ்ண்ட் டீசல் கார் எஞ்சினை 1.2 லிட்டர் திறனில் மாற்றியமைக்க முடிவில் ஹூண்டாய் உள்ளது.

எக்ஸண்ட் காரின் உள்கட்டமைப்பில் தொடுதிரை உடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு நேவிகேஷ்னுடன் உள்ளது. ஸ்மார்ட்ஃபோன் இணைத்துக்கொள்ளும் வசதி போன்றவையும் உள்ளன.

கார் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்பு கருதி ரீவெர்ஸ் பார்க்கிங்கில் சென்சார் அமைப்புகள், மின்சார ஆற்றலால் செயல்படக்கூடிய ஆண்டி-லாக் பிரக்கிங் மற்றும் முன்பக்க கார்களுக்கான ஏர்பேகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வெளிவரவுள்ள ஹூண்டாயின் எக்ஸண்ட் காருக்கு இந்தியாவில் ரூ.5.90 லட்சத்திலிருந்து, ரூ.8.70 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மார்கெட்டில் எக்ஸண்ட் மாடல் வரவேற்பை பெறும் பட்சத்தில் அது ஹோண்டாவின் அமேஸ், மாருதி சூசிகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் டிசைர் மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஏமியோ போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
2017 Hyundai Xcent Facelift Pre-booking starts in india for Rs. 11,000. Click it for price, specifications, mileage and more...
Please Wait while comments are loading...

Latest Photos