”செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மனிதனுக்கு அபாயமானது..” உலகிற்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்

”செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மனிதனுக்கு அபாயமானது..” உலகிற்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் எலான் மஸ்க்

By Azhagar

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மனித இனத்திற்கு ஆபத்து தான் உருவாகும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

அமெரிக்காவின் மாநில ஆளுநர்கள் அனைவரும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்கிடம் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

அப்போது அரங்கத்தில் இருந்த ஒருவர், ரோபோக்கள் மனித செயல்களுக்கு மாற்றாக மாறுமா? என்று வேடிக்கையாக கேள்வி எழுப்பினார்.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

எலான் மஸ்க், இதை மிகவும் சீரியஸாகவே எடுத்துக்கொண்டர், கேள்விக்கு பதிலளித்த போதும் அதில் பல நிகழ்கால உண்மைகளுடன் விளக்கினார்.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

"ரோபோவை கட்டமைக்கும் தொழில்நுட்பத்தை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே தெரியவில்லை. எந்த நாட்டு அரசும் இதை கண்டுக்கொள்வதாக இல்லை. மனிதனை விட ரோபோக்கள் எல்லா வேலைகளையும் திருத்தமாக செய்யும். அதனாலே இது மனித இனத்திற்கு ஆபத்தானது தான்"

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

"இதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளில் அரசு தலையீட வேண்டும். ரோபோவிற்கான கட்டமைப்புகளை ஆராய்ந்து வலிமையான கட்டுபாடுகளை விதிக்கவேண்டும். அரசு தாமதிக்கும் ஓவ்வொரு நாளும் மனித இனத்திற்கு ஆபத்து தான்" என்று எலான் மஸ்க் தெரிவித்த பதில்கள் அரங்கத்தில் எச்சரிக்கை மணிகளாக ஒலித்தன.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

செயற்கை நுண்ணறிவு திறனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து எலான் மஸ்க் பேசுவது இது இரண்டாவது முறை.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

2015ல் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் சேர்ந்த பிரபல விஞ்ஞானிகள் பலர் கில்லர் ரோபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கடுமையாக எதிர்த்தார்.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

மேலும், அதனால் மனித குலத்திற்க்கு அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார். இது அன்றைய நாளில் பெரிய பரபரப்பை கிளப்பின.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

இருப்பினும் "செயற்கை நுண்ணறிவு பெற்ற தொழில்நுட்பங்களை ரசிக்கும் நாம், அது ஏற்படுத்த இருக்கும் ஆபத்துகளை உணரும் போது, நிச்சயம் அதன் மேல் பயம் கொள்ள தொடங்கி இருப்போம்." என்று எலன் மஸ்க் நிகழ்ச்சியில் நிறைவாக பேசினார்

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

ஆட்டோமொபைல் உலகின் வருங்காலத்தின் முன்னோடி என்று பார்க்கப்படும் எலான் மஸ்க்கின் இந்த பேச்சு, உலகளவிலான தொழில்நுட்ப துறையில் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்கிடம் இருந்த வந்த ஆபத்து எச்சரிக்கை..!!

வருங்கால போக்குவரத்தை மேம்படுத்த ஹைப்பர்லூப் போக்குவரத்துத் திட்டம், SpaceX, எலெக்ட்ரிக் கார்கள் போன்ற மாற்று தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகம் செய்ததில் எலான் மஸ்க் பெரிய பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Read in Tamil: AI Development Programme is a Threat to Mankind Says Elon Musk. Click for Details...
Story first published: Thursday, July 20, 2017, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X