டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை ஓட்டம் நடத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுமதி!

Written By:

தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம், தானாக இயங்கக்கூடிய கார்களை சோதனை செய்வதில் மும்முரமாக இறங்கியுள்ளது. இதற்கான அனுமதியை சமீபத்தில் பெற்ற அந்நிறுவனம் முதற்கட்ட பணிகளை கலிஃபோரினியாவில் மேற்கொள்ளவுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தானியங்கி கார் தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் தானியங்கி கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

கலிஃபோர்னியாவின் பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி காரை ஓட்டக்கூடிய தொழில்நுட்பத்தை சந்தையாக்க ஆப்பிள் முயன்று வருகிறது. இதற்காக 2015ல் வெளியான லெஸஸ் ஆர்.எக்ஸ் மாடல் கார்கள் மற்றும் ஹைபிரிட் எஸ்.யூ.விகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சோதனையின் போது, அவசர நிலை ஏதேனும் நேர்ந்தால், வாகனத்தை ஆறு பேர் வரை கட்டுப்படுத்தால். மேலும், விரைவில் இதற்கான அனைத்து செயல்பாடுகளை குறித்தும் ஆப்பிள் தகவல் வெளியிடவுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆப்பிள் நிறுவனம் ‘பிரோஜெக்ட் டைட்டன்' என பெயரிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தன்னுடன் மற்ற 29 நிறுவனங்களை ஆப்பிள் இணைத்துக்கொண்டுள்ளது. அந்த நிறுவனங்களும் ஆப்பிள் ஒப்பந்தம் செய்துள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன.

தானாக இயங்கும் கார்களுக்கான திட்டப் பணிகள் முன்னரே பல நிறுவனங்களிடம் இருந்தாலும், கூகுள் இதற்கான செயல்பாடுகளில் தீவிரம் காட்டிய பிறகு தான் பல நிறுவனங்கள் தானியங்கி கார்களுக்கான பணிகளில் மும்முரம் காட்டின.

இதுபோன்று தான் ஆப்பிள் நிறுவனமும், இதில் ஆர்வமாக ஈடுபடத்தொடங்கியுள்ளது. இருந்தாலும் தானியங்கி கார் தயாரிப்பதில் இன்றும் சந்தையில் கூகுள் நிறுவனம் தான் முன்னிலையான பங்குகளை வைத்துள்ளது.

இந்த திட்டத்தில் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை தொடர்ந்து, ஊபர் கால் டாக்ஸி நிறுவனமும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட தொடங்கியுள்ளது. ஆப்பிளை போலவே, ஊபர் நிறுவனமும் தானியங்கி கார்களை வடிவமைக்கும் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளது.

English summary
US tech giant Apple has obtained test permit to test the self-driving cars in California. Read now to get all the details about the Apple's autonomous technology.
Please Wait while comments are loading...

Latest Photos