எங்கே செல்கிறது அஸ்டன் மார்ட்டினின் புதிய வல்கன் கார்கள்?

அஸ்டன் மார்ட்டின் நிறுவனம், புதிய வல்கன் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் மாடலை குறித்த விவரங்களை அறியலாம்.

By Azhagar

2014ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தால் வல்கன் ஹைப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்போர்ட்ஸ் மாடலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விற்பனைக்கு வெளியிடப்படவுள்ளது.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

7.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருதப்பட்டுள்ள இந்த கார் 800 பி.எச்.பி பவரை வழங்கும். தொடர்ச்சியாக மாற்றம் செய்யக்கூடிய திறன் கொண்ட வகையில் எக்ஸ்-டிராக் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த காரில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதாவது மொத்தம் 24 கார்களை மட்டுமே அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் வல்கன் ஹைப்பர் கார் மாடலில் தயாரித்துள்ளது. முதற்கட்டமாக விரைவில் ஐந்து கார்களை அந்நிறுவனம் விற்பனைக்காக அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

வல்கன் ஹைப்பர் காரை விற்பனைக்கு கொண்டு செல்வது போல, அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தில் இருந்து புகைப்படங்களும் வெளியாகி, அது சமூகவலைதளங்கலில் வைரலாகி உள்ளன.

அஸ்டன் மார்ட்டின் மார்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவென்றால் அனைத்து 24 வல்கன் கார்களுமே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. முதற்கட்டமாக விரைவில் அந்த கார்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு செல்லவுள்ளதாக தெரிகிறது.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

கார்களை எங்கோ ஏற்றுமதி செய்வது போல வெளியான புகைப்படங்களால் பெரிய விவாதங்களும் ஆட்டோமொபைல் உலகில் உருவாகியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு இந்த கார்கள் டெலிவிரி செய்யப்படுகின்றனவா அல்லது ஷோரூம்களுக்கு எடுத்து செல்லப்படுகிறதா என ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடையே தொடர்ந்து குழப்பங்கள் நிலவுகின்றன.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

உலகமே தற்போது வல்கன் ஹைப்பர் கார் மீது கவனத்தை திரும்பியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் 2.3 மில்லியன் விலைக்கொண்ட இந்த கார் இந்தியா மதிப்பில் ரூ.20 லட்சத்து 30 ஆயிரமாகும்.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

கடந்த காலங்களில் அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட வான்டெஜ், டி.பி.9 மற்றும் ஒன்-77 ஆகிய மாடல்களை அடிப்படையாக வைத்து, வல்கன் ஹைப்பர் காரின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

கார்பன் ஃபைபரால் காரின் அனைத்து வெளிப்புறத் தோற்றமும் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் முன்பகுதியை (chassis tub) மட்டும் பிரபல மல்டிமேட்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதே நிறுவனம் ஃபோர்டின் ஜி.டி. காரின் முன்பகுதியை தயாரித்து பாராட்டுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

முற்றிலும் மின்சார கட்டுபாட்டில் இயங்கும் காரின் உள்கட்டமைப்பை காஸ்வெர்த் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அதேபோல கார்ஃபன் சிராமிக்கில் உருவாக்கப்பட்டுள்ள இதன் நிறுத்த அமைப்புகளை இத்தாலியின் பிரபல நிறுவனமான பிரம்போ தயாரித்துள்ளது.

அதிரடியான அஸ்டன் மார்ட்டினின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்

அசத்தலாகவும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்திலும் தயாராகி உள்ள அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் வல்கன் விரைவில் சாலைகளில் கம்பீரகமாக வலம் வரவுள்ளது.

Most Read Articles
English summary
This images of $11.5 million worth Aston Martin Vulcans ready for delivery is bewitching even with the car cover on.
Story first published: Saturday, April 1, 2017, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X