ஆடி ஏ3 கேப்ரியோலே கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

திறந்து மூடும் கூரை அமைப்புடைய புதிய ஆடி ஏ3 கேப்ரியோலே கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ரூ.47.98 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஆடி கார் நிறுவனத்தின் குறைவான விலை செடான் கார் மாடலான ஏ3 காரின் திறந்து மூடும் கூரை அமைப்பு கொண்ட மாடல்தான் இந்த ஏ3 கேப்ரியோலே. தற்போது இந்தியர்களை வசீகரிக்க புதிய ஆப்ஷனில் வந்துள்ளது.

ஆடி ஏ3 கேப்ரியோலே மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 19.20 கிமீ மைலேஜ் வழங்கும் என்பதே இந்த காரின் ஆகச்சிறந்த ஹைலைட்.

பொதுவாக, சக்திவாய்ந்த பெட்ரோல் கார்களில் மைலேஜ் குறைவாக இருப்பது இயல்பு. ஆனால், இந்த காரில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிக மைலேஜ் தருவதற்கு முக்கிய காரணம், தேவைப்படும்போது மட்டும் இயங்கும் சிலிண்டர் அமைப்பை பெற்றிருக்கிறது. இதனால், எரிபொருள் விரயம் மிச்சப்படுத்தப்படுகிறது.

புதிய ஆடி ஏ3 கேப்ரியோ கார் 4,423மிமீ நீளமும், 1,793மிமீ அகலமும், 1,409மிமீ உயரமும் கொண்ட வடிவத்தை பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,595மிமீ ஆக உள்ளது.

புதிய ஆடி ஏ3 கேப்ரியோலே மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் அகலமான ஆடியின் ட்ரேட் மார்க் க்ரில் அமைப்பு சிறப்பான வசீகரத்தை கொடுக்கிறது. பக்கவாட்டில் மிக நேர்த்தியான பாடி லைன்களுடன் பின்புறமும் மிக சிறப்பாக செதுக்கப்பட்டது போன்று காட்சி தருகிறது.

டைனமிக் எல்இடி இன்டிகேட்டர்கள் இதன் பிரிமியத்தையும், அழகையும் கூட்டும் விஷயம். அதாவது,இண்டிகேட்டர் விளக்குகள் அலை அலையாக ஒளிரும். புதிய எல்இடி டெயில் லைட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பம்பர்கள் மறுவடிவமைப்பு பெற்றிருக்கின்றன.

இந்த காரில் சாஃப்ட் டாப் எனப்படும் துணியால் ஆன கூரை திறந்து மூடும் கூரை அமைப்பு உள்ளது. இந்த கார் மணிக்கு 50 கிமீ வேகத்துக்கும் குறைவாக செல்லும்போது இந்த கூரையானது திறந்து மூடும்.

திய ஆடி ஏ3 கேப்ரியோலே காரில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேங் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ சிஸ்டம் திறந்து மூடும் கூரை அமைப்புடைய இந்த காருக்கு வரவேற்கத்தக்க அம்சம். இந்த காரில் டியூவல் ஸோன் ஏசி சிஸ்டம் உள்ளது. மிலனா லெதர் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆடி ஏ3 கேப்ரியோலே காரில் 5 ஏர்பேக்குகள், இபிடி., நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

புதிய ஆடி ஏ3 கேப்ரியோலே காரின் படங்கள்!

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஆடி ஏ3 கேப்ரியோலே காரின் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

English summary
Audi A3 Cabriolet Launched In India. The facelifted drop-top Audi A3 is the first new launch of 2017 for Audi in India.
Please Wait while comments are loading...

Latest Photos