மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஏ3 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஏ3 காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது ஆடி நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஜெர்மன் கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம் அதன் போட்டியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை விற்பனையில் பின்னுக்குத்தள்ள கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டில் 5 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது ஆடி நிறுவனம். இதன் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ3 காரை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஏ3 கார் அறிமுகம்!

இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஆடி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஏ3 செடன் கார் புதிய டிசைன் பரிபாலன்களுடன் வெளிவந்துள்ளது. இது மெர்சிடிஸ் சிஎல்ஏ கிளாஸ் காருக்கு போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஏ3 கார் அறிமுகம்!

புதிய ஆடி ஏ3 காரில் டயமண்ட் வடிவத்தில் கவர்ச்சிகரமான முகப்பு கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பகல்நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி லைட்டுகளுடன் கூடிய பை-ஸெனான் ஹெட்லைட்டுகள் உள்ளது. முழுமையான எல்ஈடி முகப்பு விளக்கு ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஏ3 கார் அறிமுகம்!

இதில் 16 இஞ்ச் ஸ்போக் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் பின்புற விளக்குகள் பொலிவூட்டப்பட்டுள்ளன. டூயல் எக்ஸாஸ்ட் பைப்புகள் ஸ்போர்டி லுக்கை இக்காருக்கு அளிக்கின்றது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஏ3 கார் அறிமுகம்!

7 ஏர் பேக்குகள், சன் ரூஃப், வயர்லஸ் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டேஷ்போர்ட் ஸ்கிரீன் 11 மிமீ தடிமன் கொண்டதாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ இதில் கொடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஏ3 கார் அறிமுகம்!

உட்புறத்தில் டூயல் டோன் அல்லது கருப்புவண்ண லெதர் வேலைப்பாடு கொண்ட ஆஃப்ஷன்களில் கிடைக்கிறது. 10 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ செட்டப், 7 இஞ்ச் எம்எம்ஐ கலர் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இஞ்சின்

இஞ்சின்

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஏ3 கார் ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் வேரியண்டில் கிடைக்கிறது.

1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்சின், அதிகபட்சமாக 148 பிஹச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

இஞ்சின்

இஞ்சின்

இதே போல இதன் டீசல் வேரியண்டில் 2.0 லிட்டர் டீசல் இஞ்சின், அதிகபட்சமாக 139 பிஹச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

மேம்படுத்தப்பட்ட ஏ3 பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 19.20 கிமீ மற்றும் டீசல் வேரியண்ட் லிட்டருக்கு 20.38 கிமீ மைலேஜும் தரும் என ஆடி நிறுவனம் கூறுகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஆடி ஏ3 கார் 7 வண்ணங்களில் கிடைக்கிறது.

  • ஸ்கூபா புளூ மெட்டாலிக்
  • கிளேசியர் ஒயிட் மெட்டாலிக்
  • மிசானோ ரெட் பேர்ல் எஃபெக்ட்
  • பிரில்லியண்ட் பிளாக்
  • ஃலோரெட் சில்வர் மெட்டாலிக்
  • மிசானோ ரெட்
  • பெலூகா பிரவுன் மெட்டாலிக்
  • விலை விவரம்

    விலை விவரம்

    மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ3 காரின் விலை விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது...

    • ஏ3 35 டிஎஃப்எஸ்ஐ ( பெட்ரோல் ) - ரூ.30.5 லட்சம்
    • ஏ3 35 டிடிஐ ( டீசல் ) - ரூ.32.3 லட்சம்
    • இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்..

Most Read Articles
English summary
Read in Tamil about 2017 Audi A3 launch in India. check price, specifications, features, mileage and more.
Story first published: Thursday, April 6, 2017, 18:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X