விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவின் டாப் - 6 கார் நிறுவனங்கள்!

விற்பனைக்கு பிந்தைய சேவையில் சிறந்த கார் நிறுவனங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

செவர்லே கார் பிராண்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு, விற்பனைக்கு பிந்தைய சேவையில் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடத்தில் நன் மதிப்பை பெறாததும் முக்கிய காரணம். இதுபோன்றே விற்பனைக்கு பிந்தைய சேவையில் சொதப்பி வரும் இதர சில நிறுவனங்களும் இந்திய வர்த்தகத்தில் தடுமாறி வருகின்றன. அந்த நிறுவனங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையிலேயே உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் நிறுவனங்கள் எது என்பது குறித்த கேள்வி எல்லோருக்கும் எழுவது இயல்பு. அந்த வகையில், விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் சிறந்த பட்ஜெட் கார் நிறுவனங்களின் விபரங்களை தொடர்ந்து காணலாம். ஜேடி பவர் நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் இதர அம்சங்களில் சிறந்த சேவை அளித்து வரும் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன.

மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி

மாருதி நிறுவனம் கார் மார்க்கெட்டின் ராஜாவாக வலம் வருவதற்கு காரணமே, விற்பனைக்கு பிந்தைய சேவையில் நம்பர்-1 நிறுவனமாக இருப்பதுதான். ரெனோ க்விட் போன்ற சிறந்த தயாரிப்புகள் வந்தாலும் கூட, மாருதி 800 மார்க்கெட்டை இன்றளவும் உடைக்க முடியவில்லை. காரணம், சிறந்த வாடிக்கையாளர் சேவை. அத்துடன், நாடு முழுவதும் பரந்து விரிந்த சர்வீஸ் மையங்கள் எண்ணிக்கை.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவின் டாப் - 6 கார் நிறுவனங்கள்!

குறைவான பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ், சரியான விலையில் வழங்கப்படும் தயாரிப்புகள் என வாடிக்கையாளர்களை வேறு பக்கம் கவனம் திரும்ப விடாமல் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது மாருதி கார் நிறுவனம். பட்ஜெட் கார்களில் மாருதி நிறுவனம் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை கைவசம் வைத்திருப்பதற்கு பின்னால் சிறப்பான வாடிக்கையாளர் சேவைதான் காரணமாக இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார்ஸ்

ஹூண்டாய் மோட்டார்ஸ்

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்திய கார் சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. மாருதிக்கு அடுத்து விற்பனையில் சிறந்து விளங்குவதற்கு அழகான கார்களை வடிவமைத்து கொடுத்திருப்பதுடன், விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் ஹூண்டாய் சிறந்து விளங்குகிறது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவின் டாப் - 6 கார் நிறுவனங்கள்!

க்ரெட்டா, எலைட் ஐ20, கிராண்ட் ஐ10 உள்ளிட்ட கார் மாடல்கள் விற்பனையில் சக்கை போடு போடுவதற்கும், சான்ட்ரோ கார் மற்றும் 10 கார்களுக்கு இன்றைக்கும் மார்க்கெட்டில் சிறந்த மறு விற்பனை மதிப்பு இருப்பதற்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை சிறப்பாக இருப்பதுடன், உதிரிபாகங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதும் முக்கிய காரணம்.

ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ்

ஜேடி பவர் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் மாருதி நிறுவனத்துக்கு இணையான மிகச் சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவையை வழங்கும் நிறுவனம் என்ற பெருமையை ஹோண்டா கார் நிறுவனம் பெற்றது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவின் டாப் - 6 கார் நிறுவனங்கள்!

உலகின் மிகச் சிறந்த பெட்ரோல் எஞ்சின்களை தயாரிக்கும் பெருமை கொண்ட ஹோண்டா நிறுவனம் தற்போது டீசல் மாடல் தயாரிப்பிலும் நன்மதிப்பை பெற்றுள்ளது. அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவீனம், விஸ்தரிக்கப்பட்டு வரும் சர்வீஸ் நெட்வொர்க் போன்றவற்றுடன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது ஹோண்டா.

மஹிந்திரா

மஹிந்திரா

இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்திய நிறுவனம் என்ற பெருமையை மஹிந்திரா பெறுகிறது. கம்பீரமும், கவர்ச்சியும் கலந்த எஸ்யூவி வகை கார் மாடல்கள் மூலமாக வாடிக்கையாளர்களை கவர்ந்த மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் சிறப்பான நிறுவனமாக விளங்குகிறது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவின் டாப் - 6 கார் நிறுவனங்கள்!

சர்வீஸ் செய்து தரும் முறை, பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம், பழுது நீக்கித் தரும் திறன், மாருதி நிறுவனத்துக்கு அதிக எண்ணிக்கையிலான சர்வீஸ் மையங்கள் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களிடம் நற் பெயரை பெற்றிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

டொயோட்டா

டொயோட்டா

நம்பகமான தயாரிப்புகளை வழங்கி இந்தியர்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கும் டொயோட்டா நிறுவனம், விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இன்னோவா, ஃபார்ச்சூனர், கரொல்லா ஆல்டிஸ், எட்டியோஸ் உள்ளிட்ட கார்கள் நம்பகத்தன்மையிலும், விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளன.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவின் டாப் - 6 கார் நிறுவனங்கள்!

விற்பனை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆன பல டொயோட்டா குவாலிஸ் கார்கள் இன்று சிறந்த நிலையில் இயங்குவதற்கு டொயோட்டாவின் விற்பனைக்கு பிந்தைய சேவையும், உதிரிபாகங்கள் சப்ளையும் மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது உள்ளூர் உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், பராமரிப்பு செலவுகளும் வெகுவாக குறைந்துள்ளன.

ஃபோர்டு

ஃபோர்டு

ஈக்கோஸ்போர்ட், ஃபிகோ, ஆஸ்பயர் உள்ளிட்ட கார் மாடல்களுடன், மார்க்கெட்டில் கலக்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் இப்போது சிறந்த நிறுவனமாக மாறி இருக்கிறது.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவின் டாப் - 6 கார் நிறுவனங்கள்!

குறித்த நேரத்தில், மிகச் சிறந்த பணியாளர்களை கொண்டு கார் சர்வீஸ் செய்து தரும் இப்போது விற்பனைக்கு பிந்தைய சேவையில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. சர்வீஸ் கட்டணம் அதிகம் என்ற பிம்பத்தை மாற்றி அமைக்கும் முயற்சிகளிலும் வெற்றி கண்டிருக்கிறது. தற்போது சிறந்த விற்பனைக்கு பிந்தைய சேவை வழங்கும் நிறுவனங்களில் ஃபோர்டும் ஒன்றாகி மாறி இருக்கிறது.

உங்களது பார்வையில் அல்லது அனுபவத்தில் விற்பனைக்கு பிந்தைய சேவையில் சிறந்த நிறுவனங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Best Car Brands In After Sales Service In India.
Story first published: Tuesday, June 6, 2017, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X