வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎம்டபிள்யூ கார்கள் விலை உயருகிறது

கார்கள் விலையை வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

சொகுசு கார்கள் தயாரிப்பில் ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் உலகம் முழுவதும் பிரலமானதாக உள்ளது. இந்தியாவில் தற்போது சொகுசுக் கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பிஎம்டபிள்யூ, தனது ஒட்டுமொத்த கார்களின் விலையையும் 2% உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் 18 மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது, நாடு முழுவதும் 41 ஷோரூம்களை கொண்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் மற்றொரு பிராண்டான ‘மினி' கார்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

அனைத்து பிஎம்டபிள்யூ மாடல்களுடன் சேர்த்து மினி கார்களின் விலையையும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ கார்களின் விலை 31 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.2.16 கோடி வரையிலான விலையில் இங்கு கிடைக்கிறது. இந்த புதிய விலை ஏற்றத்தின்படி குறைந்தபட்சம் மாடல்களுக்கு தகுந்தவாறு ரூ.62,000 முதல் ரூ.4.32 லட்சம் வரை விலை ஏற்றம் இருக்கும்.

இந்திய அளவில் நிலவும் பொருளாதார காரணங்களின் அடிப்படையில், இந்த விலை உயர்வை மேற்கொள்ளப் போவதாக, பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. இந்திய அளவில் விற்கப்படும் தனது அனைத்து மாடல் கார்களுக்கும் இந்த விலையேற்றம் பொருந்தும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், மினி ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், செடான் பிரிவில் பிஎம்டபிள்யு 1, 3, 5, 6, 7 சீரீஸ் கார்களும், எஸ்யுவி பிரிவில் எக்ஸ் 1,எக்ஸ் 3, எக்ஸ் 5 மற்றும் எம் சீரிஸ் ஸ்போர்ட்ஸ் கார்களையும் இந்த நிறுவனம், இந்தியா முழுவதும் விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் விற்பனை ஆகும் பிஎம்டபிள்யூ மாடல் கார்கள் சென்னையிலுள்ள அதன் தொழிற்சாசாலையில் தான் அசெம்பிள் செய்யப்படுகிறது. எம் மற்றும் ஐ மாடல்கள் வெளிநாட்டிலேயே முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் மினி கூப்பர், மினி கண்ட்ரிமேன், மினி கிளப்மேன் ஆகிய 3 மினி பிராண்டு கார்கள் விற்பனையில் உள்ளது. இவை ரூ.25.60 லட்சம் முதல் ரூ.37.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் மினி கூப்பர், மினி கண்ட்ரிமேன், மினி கிளப்மேன் ஆகிய 3 மினி பிராண்டு கார்கள் விற்பனையில் உள்ளது. இவை ரூ.25.60 லட்சம் முதல் ரூ.37.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் விக்ரம் பிரவா தெரிவித்தபோது, "இந்திய வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்படி எப்போதும் உலகத்தர கார்களையும், விற்பனைக்கு பிந்தைய சேவையையும் சிறப்பாக அளித்து வருகிறது பிஎம்டபிள்யூ"

இது தொடர்பாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் விக்ரம் பிரவா தெரிவித்தபோது, "இந்திய வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்படி எப்போதும் உலகத்தர கார்களையும், விற்பனைக்கு பிந்தைய சேவையையும் சிறப்பாக அளித்து வருகிறது பிஎம்டபிள்யூ"

இந்தியாவில் மேலும் தனது இடத்தை நிலையாக்க புதிய 5 மற்றும் 7 சீரீஸ் கார்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 5 சீரீஸ் கார்கள் ஹைபிரிட் அல்லது பிளக்-இன்-ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டுள்ளதாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ மட்டுமல்லாது கடந்த ஜனவரி மாதத்தில் டாடா, ஹுண்டாய், மாருதி சுசுகி, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட சில கார் நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை 2 முதல் 3 சதவீதம் வரை விலை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

கேஸ்ட்ரால் நிறுவனத்தின் புதிய பைக் இஞ்சின் ஆயில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரான புதிய ஐ8 காரின் படங்களை காணலாம்..

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரான புதிய ஐ8 காரின் படங்களை காணலாம்..

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
bmw new price hike in india, details and more
Please Wait while comments are loading...

Latest Photos