புகாட்டி சிரோன் காரால் இந்த வேகத்திற்கு மேல் செல்ல முடியாதாம்!

Written By:

சாதாரண சாலையில் செல்லும் சிறப்பம்சங்கள் கொண்ட உலகின் அதிவேக கார் என்ற பெருமைக்குரிய மாடல் புகாட்டி வேரோன். இந்த கார் மணிக்கு 237 மைல் [381 கிமீ] வரை செல்வதற்கான டாப் ஸ்பீடு கொண்டதாக விற்பனைக்கு கிடைத்தது.

அதேநேரத்தில், இந்த கார் உலக சாதனை நிகழ்வில், மணிக்கு 431 கிமீ வேகத்தை தொட்டு புதிய உலக சாதனை படைத்தது. இந்த நிலையில், புகாட்டி வேரான் கார் இலக்கு வைக்கப்பட்ட அனைத்து கார்களுக்கும் முன்பதிவு முடிந்து போனதால், அதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல் புகாட்டி சிரோன்.

வேரான் காரைவிட கூடுதல் சக்தி மற்றும் தொழில்நுட்ப வல்லமையுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. 1,500 பிஎச்பி திறன் வாய்ந்த இந்த புகாட்டி சிரோன் கார் மணிக்கு 261 மைல் [ 420 கிமீ] டாப் ஸ்பீடு கொண்டதாக கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், லீ மான்ஸ் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவரும், புகாட்டி நிறுவனத்தின் டெஸ்ட் டிரைவருமான ஆன்டி வாலஸ் புகாட்டி சிரோன் கார் குறித்து பாப்புலர் மெக்கானிக் பத்திரிக்கைக்கு விசேஷ பேட்டி அளித்துள்ளார்.

அதில், அந்த கார் மணிக்கு 300 மைல் வேகம் என்ற இலக்கை கடப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த காரில் இருக்கும் டயர்கள் மணிக்கு 300 மைல் வேகம் என்ற இலக்கை கடப்பதற்கு தகுதியானதாக இல்லை என்று தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள மணிக்கு 261 மைல் வேகம் என்ற அதிகபட்ச வேகத்தை காரின் எஞ்சின் எளிதாக எட்டினாலும், இதன் சக்கரங்களும், அதன் டயர்களும் இதனை தாங்கும் வலிமை கொண்டதாக இருக்காது என்று இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்த வாலஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், மணிக்கு 300 கிமீ வேகத்தை தாங்கும் வல்லமையுடன் இந்த காருக்கான டயர் இப்போது இல்லை என்றும் வாலஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சக்கரத்திலும் 2.5 கிராம் வால்வ் கேப் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுவே மணிக்கு 261 மைல் என்ற அதிகபட்ச வேகத்தில் செல்லும்போது ஒவ்வொரு வால்வ் கேப்பும் 16 பவுண்ட் எடைக்கு நிகரான எடையை பெற்றிருக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

தற்போதுள்ள டயர்களை மணிக்கு 280 மைல் வேகம் வரை செல்வதற்கு ஏற்றவாறு மிச்செலின் எஞ்சினியர்கள் மேம்படுத்துவார்கள் என்று நம்பலாம். ஆனால், எதிர்காலத்தில் வரும் புகாட்டி சிரோன் கார் மணிக்கு 300 மைல் [481 கிமீ] வேகம் என்ற இலக்கை எட்டும் வகையில் புகாட்டி நிறுவனம் உருவாக்கும் என்று நம்பலாம் என்று வாலஸ் தெரிவித்துள்ளார்.

கார் எஞ்சின் மிகவும் வல்லமை வாய்ந்ததாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் கார் மணிக்கு 420 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் வேகம் கடுப்படுத்தப்பட்டே புகாட்டி சிரோன் கார் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti Chiron can't go over 300 MPH: Here Is The Reason.
Story first published: Monday, June 26, 2017, 11:52 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos