ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ள 7 புதிய கார்கள் பற்றிய தகவல்கள்!

இந்திய கார் சந்தையில் ஏப்ரல் மாதத்தில் ஸ்விஃப்ட் டிசைர், ஆடி ஏ3 உள்ளிட்ட 7 கார்கள் அறிமுகமாக உள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

புதிதாக கார் வாங்க இருப்பவர்கள் அதற்கு முன்னர், சந்தையில் புதிதாக என்னென்ன கார்கள் அறிமுகமாக இருக்கின்றன என்பதனை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த மாதம் இந்தியாவில் மாருதி, ஜீப், ஆடி, லம்போர்கினி உள்ளிட்ட நிறுவனங்களின் 7 புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன. அவை குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆடி

ஆடி

சொகுசுக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம், இந்தியாவில் அதன் ஆரம்ப நிலை செடன் மாடலான மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ3 காரை ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இது தோற்றத்தில் பல மாறுதல்கள் கொண்டதாக இருக்கும்.

லம்போர்கினி

லம்போர்கினி

ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான சந்தையில் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் இத்தாலி நிறுவனமான லம்போர்கினியின் புகழ்பெற்ற Huracan Performante கார் ஏப்ரல் 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

லம்போர்கினி

லம்போர்கினி

இந்த சூப்பர் காரானது உலகப்புகழ் பெற்ற ரேஸ் டிராக்கான ஜெர்மனியில் உள்ள Nürburgring பந்தய தடத்தில் ஒரு லேப்பில் அதிவேகமாக கடந்த சாதனையை தன் வசம் வைத்துள்ள கார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வால்வோ

வால்வோ

சொகுசுக் கார் சந்தையில் உள்ள மற்றொரு முக்கியமான நிறுவனமாக விளங்கும் ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ நிறுவனத்தின் புதிய செடன் மாடலான எஸ்60 போல்ஸ்டார் கார் ஏப்ரல் 14ஆம் தேதி அறிமுகமாக உள்ளது.

வால்வோ

வால்வோ

வால்வோ எஸ்60 போல்ஸ்டார் காரில் 2.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்ஜுடு மற்றும் டர்போசார்ஜ்ஜூடு பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 362 பிஹச்பி ஆற்றலை வழங்கவல்லது. இவை ஆல் வீல் டிரைவ் வேரியண்டாக மட்டுமே கிடைக்கும்.

டட்சன்

டட்சன்

நிசான் நிறுவனத்தின் துணை பிராண்டான டட்சன் இந்தியாவில் செயல்படத்துவங்கி 4 ஆண்டுகள் நிறைவடைவதனை கொண்டாடும் பொருட்டு கோ மற்றும் கோ+ ஹேட்ச்பேக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.

டொயோட்டா

டொயோட்டா

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா மாடலானது, இந்திய கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்திருந்த ஒரு மாடலாகும்.

டொயோட்டா

டொயோட்டா

இன்னோவாவின் இடத்தை இன்னோவா கிரிஸ்டா கார் கொண்டு நிரப்பியது டொயோட்டா. தற்போது இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் அறிமுகமாக உள்ளது. கருப்பு வண்ண அலாய் வீல்கள் கொண்டு கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது டூரிங் ஸ்போர்ட்

ஜீப்

ஜீப்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜீப் நிறுவனம் வரும் ஏப்ரல் 12ல் அதன் சிறிய ரக எஸ்யூவியான காம்பாஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது லேண்ட் ரோவர்

காருக்கு போட்டியாக இருந்தாலும், விலை அடிப்படையில் அதனுடன் போட்டி போட முடியுமா என்பதனை அறிய இன்னும் சிறிது நாள் காத்திருக்க வேண்டும்.

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

இந்திய கார் சந்தையில் முன்னோடியாக உள்ள மாருதி நிறுவனம், அதன் வெற்றிகரமான மாடலான ஸ்விஃப்ட் டிசைர் காம்பாக்ட் செடன் காரை இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது.

Most Read Articles
English summary
what new car launches in april 2017
Story first published: Tuesday, April 4, 2017, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X