பறிமுதலான சூப்பர் கார்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு!

சென்னை இசிஆர் சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் கார்கள் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

By Saravana Rajan

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை இசிஆர் சாலையில் அதிவேகத்தில் சென்றதாக கூறி 10 சூப்பர் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் பந்தயம் நடத்தியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

பறிமுதலான சூப்பர் கார்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு!

சூப்பர் கார்களை ஓட்டி வந்த 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டனர். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் கார்களை விடுவிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஒரு வாரம் கழித்து பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர்கார்களை போலீசார் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

பறிமுதலான சூப்பர் கார்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு!

"இனி ரேஸில் ஈடுபடமாட்டோம்", என்று கார் உரிமையாளர்கள் உறுதிமொழி அளித்ததையடுத்து, கார்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரின் நண்பர் டிரைவ்ஸ்பார்க் தளத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

பறிமுதலான சூப்பர் கார்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு!

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் போக்குவரத்து குறைவாக என்பதால், மகாபலிபுரம் வரை தங்களது சூப்பர் கார்களில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சென்று வருவோம். காலை 6 மணியளவில் சென்னையில் புறப்பட்டு, மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு சென்னை திரும்புவது வழக்கம்.

பறிமுதலான சூப்பர் கார்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு!

கடந்த ஞாயிற்றுக் கிழமையும் அவ்வாறே மகாபலிபுரம் நோக்கி சென்றபோதுதான் தங்களது சூப்பர் கார்களை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர். காரை அதிவேகத்தில் ஓட்டவில்லை. சூப்பர் கார்கள் பொதுவாகவே சப்தம் அதிகம் எழுப்பும் என்பதால், அதிவேகத்தில் சென்றதுபோன்று தோன்றியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

பறிமுதலான சூப்பர் கார்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு!

பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் கார்களை வாங்குவதற்கு அலைகழிக்கபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், உண்மை நிலவரம் என்ன என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. ஏனெனில், இதுபோன்று சூப்பர் கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகளில் வருவோரை பிடித்து போலீசார் வலுக்கட்டாயமாக அபராதம் விதித்து வருவதாகவும் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.

பறிமுதலான சூப்பர் கார்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு!

இதனிடையே, சூப்பர் கார்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டாலும், இந்த பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. சம்பந்தப்பட்ட சூப்பர் கார் உரிமையாளர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 6ந் தேதி சூப்பர் கார் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Read in Tamil: Chennai Cops has Handed over impounded super cars to their Owners.
Story first published: Friday, March 3, 2017, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X