இந்தியாவில் 3 கார் மாடல்களின் விற்பனையை நிறுத்துகிறது செவர்லே!

Written By:

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸின் துணை நிறுவனமான செவர்லே இந்தியாவில் பீட், டவேரா, எஞ்சாய், செயில், க்ரூஸ், ஸ்பார்க், கேப்டிவா போன்ற கார்களை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தையில் 36.9% பங்குகளை கொண்ட இதனை 'செவி' என செல்லமாகவும் அங்கு அழைக்கின்றனர்.

இந்திய வாகனச் சந்தையில் 2.3% அளவிற்கே செவர்லே நிறுவனம் பங்களிப்பு கொண்டாலும் அதன் பீட், க்ரூஸ், டவேரா கார்கள் இங்கு மிகவும் பிரபலமான மாடல்களாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், செவர்லே நிறுவனம் திடீரென அதன் 3 மாடல்களை இந்தியாவில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இக்கார்களை இந்தியாவில் வாங்க இயலாது. இந்திய சந்தையில் தனக்கான இடத்தை மேம்படுத்தும் பொருட்டு செவர்லே இந்த முடிவை எடுத்துள்ளது.

செவர்லே நிறுவனத்தின் நன்கு விற்பனையாகும் ‘டவேரா', மல்டி பர்பஸ் வெஹிகிளான ‘எஞ்சாய்', செடன் காரான ‘செயில்' ஆகியவற்றுடன் ‘செயில் யுவா' ஹேட்ச்பேக் கார் உள்ளிட்டவை இந்தியாவில் இருந்து நீக்கப்படும் மாடல்களாகும்.

2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டவேரா மாடல், அக்காலகட்டத்தில் டாடா சுமோ, மஹிந்திரா பொலிரோ ஆகிய கார்களுக்கு போட்டியாக விளங்கியது. செவர்லே நிறுவனத்தின் நன்கு விற்பனையாகும் மாடலாக டவேரா திகழ்ந்து வந்தாலும், சமீபத்தில் அதன் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது.

இதே போல மல்டி பர்பஸ் வெஹிகிளான எஞ்சாய் மாடலை கடந்த 2013ல் அறிமுகப்படுத்தியது செவர்லே, இதோடு சேர்த்து 2012ல் அறிமுகப்படுத்தப்பட்ட செயில் யுவா மற்றும் 2013ல் அறிமுகமான செயில் ஆகிய கார்களும் விற்பனையில் சறுக்கியதால் செவர்லே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இதன்படி வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் எனும் இடத்தில் அமைந்துள்ள செவர்லே நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலையில் இக்கார்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த மாடல்களை நிறுத்துவதால் செவர்லே நிறுவனத்தின் புதிய கார்களை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பீட் காரையும், ஒரு கிராஸ் ஓவர் மாடல் மற்றும் காம்பேக்ட் செடனான ‘எசன்சியா' கார்களை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டம் வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்தியாவில் செவர்லே எசன்சியா காரை ஏற்கெனவே அந்நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இக்கார் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாடல்களை நிறுத்துவதால், க்ரூஸ் மற்றும் டிரையல்பிளேசர் கார்கள் மீது செவர்லே கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக செவர்லே நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் கஹர் கசீம் கூறுகையில், "வாடிக்கையாளர்கள் விருப்பந்தக்க உயர் பாதுகாப்பு அம்சங்கள்
தரமான கார்களை செவர்லே நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த எண்ணியுள்ளது".

"அடுத்த 24 மாத கால கட்டத்திற்குள் 5 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் புதிய டிரையல்பிளேசர், புதிய பீட், புதிய க்ரூஸ், எசன்சியா மற்றும் பீட் ஆக்டிவ் ஆகியவை இடம்பெறும்" என்றார்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய தீர்மாணித்துள்ளதாக செவர்லே நிறுவனம் ஏற்கெனவே கூறியிருந்தது. எனினும் புதிய மாடல்கள் அறிமுகத்தில் கூடுதல் கவனத்துடன் செவர்லே நிறுவனம் செயல்படும் என தெரிகிறது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்: 

Story first published: Friday, March 17, 2017, 11:08 [IST]
English summary
thieves who made away with suvs sedans during-test drives held
Please Wait while comments are loading...

Latest Photos