டொயோட்டா சுப்ரா ஸ்போர்ட்ஸ் கார் இஞ்சின் கொண்டு மாடிஃபை செய்யப்பட்ட ஜீப் ரேங்கலர்..!!

Written By:

ஆஃப் ரோட் வாகனங்களுக்கு பெயர் போன அமெரிக்காவின் மதிப்புமிகு பிராண்டான ஜீப், சாகச விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக விளங்கி வருகிறது.

அதிக ஆற்றல் வாய்ந்த இஞ்சின் பவர் கொண்ட ஜீப் பிராண்டின் வாகனங்கள் கடினமான நிலப்பரப்புக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுபவை.

ஆஃப் ரோடு வாகன விரும்பிகள் அதிகம் மாடிஃபை செய்யும் மாடலாகவும் ஜீப் உள்ளது, என்றபோதிலும்
இங்கு ஒரு புதியவிதமான மாடிஃபைடு ஜீப ரேங்கலரை காண இருக்கிறீர்கள்.

மாடிஃபை செய்யப்பட்ட ஒரு ஜீப் ரேங்கலரில் அதிக வேகம் கொண்ட டொயோட்டா சுப்ரா ஸ்போர்ட்ஸ் காரின் இஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 350 ஹச்பி ஆற்றலை வழங்கவல்லது. இதில் ஹச்கேஎஸ் புளோ ஆஃப் வால்வு ஒன்றும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது

சுப்ரா இஞ்சின் மற்றும் ஜீப் தோற்றம் என கலவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடிஃபைடு ஜீப் கடினமான நிலப்பரப்பில் பயணிக்கத்தக்க வகையில் அதிக பவர் மற்றும் அதிக வேகத்தில் செல்லக்கூடிய திறனையும் ஒருங்கிணைத்துள்ளது.

இந்த வாகனத்தை மாடிஃபை செய்த நிறுவனத்தார் இது தனித்து தெரியும் வகையில் பல பல சிறப்பான அம்சங்களை இதில் சேர்த்துள்ளனர்.

இதில் வட்ட வடிவ ஹெட்லைட்டுகள், எல்ஈடி முகப்பு விளக்குகள், ஆஃப் ரோடு முகப்பு பம்பர்கள், வீல் ஆர்ச்சுகளில் கருப்பு நிற கிளாடிங், கருப்பு நிற அலாய் வீல்கள் ஆகிவை உள்ளன. மேலும் டோ செய்யும் முன்புறமும், பின்புறமும் கொக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல கிரிப் கிடைக்கும் வகையில் அகலமான டயர்கள், ஃபுட் ஸ்டெப்கள், லெதர் சீட்கள், தனித்துவமான கிளஸ்டர் என பல்வேறு வேலைபாடுகளால் மெருகேற்றப்பட்டுள்ளது.

டொயோட்டா சுப்ரா இஞ்சுனுடன் கூடிய மாடிஃபை செய்யப்பட்ட ஜீப் ரேங்கலரின் வீடியோவை மேலே உள்ள ஸ்லர்டரில் காணலாம்.

English summary
Read in Tamil about jeep wrangler modified with toyota supra sports car engine.
Please Wait while comments are loading...

Latest Photos