மாசு உமிழ்வு மோசடியில் அடுத்து சிக்கும் பிரபல நிறுவனம்; பின்னி பெடல் எடுக்கும் ஜெர்மன் அரசு..!!

Written By:

ஜெர்மன் ஆட்டோமேக்கரான டெய்ம்லர் நிறுவனம் மாசு விதிகளை பின்பற்றாமல் 10 லட்சம் வாகனங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுப்பற்றி ஜெர்மனின் ஸ்டூட்கெர்ட் நகர நீதிமன்றம் டெய்ம்லர் மீது விசாரணை மேற்கொண்டதாக மியுனிக் நகரத்தில் இயங்கக்கூடிய சியூட்டேயுச்சே சைட்டோங் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய மாசு விதிகள் கொண்ட டீசல் கார்கள் என்று கூறி, மாசு உமிழ்வு செய்யும் கார்களை டெய்ம்லர் விற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கடந்த மே மாதம் 23ம் தேதி, நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளது போன்ற தகவல்களை சியூட்டேயுச்சே சைட்டோங் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றம் விசாரணைக்காக வழங்கிய ஆவணங்களில், சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மாசு உமிழ்வு செய்யும் கார்கள் விற்கப்பட்டு உள்ளது, அதனால் மெர்சிடிஸ்-பென்ஸ் தயாரிப்புகளுக்கு பெரிய பிரச்சனை உருவாகலாம் என்று தெரிகிறது.

இந்த கார்கள் அனைத்தும் 2008 முதல் 2016 வரை ஜெர்மன் உட்பட சில ஐரோப்பா நாடுகள் மற்றும் அமெரிக்காவில் விற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

OM 642 மற்றும் OM 651 என்ற குறிப்பு எண்களை கொண்ட எஞ்சின்கள் தான் கார்களில் பொறுத்தப்பட்டுள்ளன. இதை வைத்தே ஸ்டூட்கெர்ட் நீதிமன்றம் மாசு உமிழ்வை கணக்கிட்டு வருகிறது.

ஜெர்மனில் எழுந்துள்ள இந்த புகாரை குறித்து கருத்து தெரிவித்துள்ள டெய்ம்லர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,

கடந்த 8 ஆண்டுகளாக முறைகேடான கார்களை டெய்ம்லர் விற்பனை செய்திருந்தால், அது எப்பொழுதோ ஜெர்மனில் தடையை பெற்றிருக்கும் இருந்தாலும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார் அவர்.

 

மாசு உமிழ்வு மோசடியில் வோக்ஸ்வேகனின் முறைகேடான கார் விற்பனை வெளியானதை அடுத்து, பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடினமான நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றன.

தற்போது உலகின் முதன்மையான டெய்ம்லர் கார் தயாரிப்பு நிறுவனமும் இந்த முறைகேட்டில் சிக்கி இருப்பது ஆட்டோமொபைல் உலகை அதிர்ச்சியுற செய்துள்ளது.

மேலும்... #டெய்ம்லர் #daimler
English summary
Read in Tamil: German automaker Daimler has been accused of selling Cars with excessive emissions. Click for Details...
Story first published: Thursday, July 13, 2017, 15:58 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos