இந்த ஆண்டு மத்தியில் வருகிறது டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி!

Written By:

பட்ஜெட் விலையில் புத்தம் புதிய கார் மாடல்களை டட்சன் பிராண்டில் நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் ரெடிகோ கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்து கோ க்ராஸ் என்ற அசத்தலான புதிய மினி எஸ்யூவி மாடலை டட்சன் பிராண்டில் நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த இந்த கார் தற்போது உற்பத்தி நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நிஸான் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

வரும் ஏப்ரல் மாதம் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்த கையோடு, டட்சன் கோ க்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிஸான் திட்டமிட்டு இருக்கிறது. அதாவது, இந்த ஆண்டு மத்தியில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஸான் மைக்ரா காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் வருகிறது.

மிக வசீகரமான முகப்பை பெற்றிருக்கிறது டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி. அறுகோண வடிவ க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட், ஸ்கிட் பிளேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் மூலமாக எஸ்யூவிக்கான முரட்டுத் தோற்றத்தை பெற்றிருக்கிறது.

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மினி எஸ்யூவி மாடலாக வருகிறது. 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை இந்த டட்சன் கோ க்ராஸ் மினி எஸ்யூவி பெற்றிருக்கும்.

டடசன் பிராண்டில் வரும் 4வது கார் மாடலாக டட்சன் கோ க்ராஸ் வருகிறது. ரூ.5 லட்சம் விலையில் டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்யூவி பிரியர்களுக்கு பட்ஜெட் விலையில் பாந்தமான மாடலாக இருக்கும்.

சென்னை ஒரகடத்தில் உள்ள நிஸான்- ரெனோ கார் நிறுவனத்தின் ஆலையில் இந்த புதிய கார் உற்பத்தி செய்யப்படும். இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Go Cross was showcased by the Datsun as a concept at the 2016 Auto Expo.
Please Wait while comments are loading...

Latest Photos