3ம் ஆண்டு கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிஷன் டட்சன் கோ, கோ பிளஸ் கார்கள் அறிமுகம்!

டட்சன் நிறுவனத்தின் கோ மற்றும் கோ-பிளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம், நடுத்தர வருவாய் பிரிவு குடும்பங்களை அதிகமாகக் கொண்ட இந்தியர்களுக்காக 'டட்சன்' பிராண்டின் கீழ் மலிவு விலையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் டட்சன் கோ, டட்சன் கோ-பிளஸ் மற்றும் ரெடி-கோ ஆகிய மாடல்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

டட்சன் கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ-பிளஸ் மல்டி பர்பஸ் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்பெஷசல் எடிஷன் கோ மற்றும் கோ-பிளஸ் கார்களை தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது டட்சன் இந்தியா நிறுவனம்.

சிறப்பம்சங்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டட்சன் கார்களில் புதிய பாடி கிராஃபிக்ஸ், கருப்பு வண்ணத்தில் ஸ்போர்டி ரியர் ஸ்பாய்லர் மற்றும் 3வது ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் அனிவர்சரி பேட்ஜ் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

கூடுதல் சிறப்புகளை உள்ளடக்கியதாக இக்கார்கள் வெளிவந்துள்ளது. இரண்டு கார்களின் உட்புறத்திலும் சீட், டேஷ்போர்ட், கன்சோல், கியர் லீவர் உள்ளிட்ட பகுதிகளில் நீல நிறத்தில் லைனிங் செய்யப்பட்டுள்ளது. இது உட்புறத்திற்கு முற்றிலும் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

சிறப்பம்சங்கள்

ஸ்பெஷல் எடிஷன் கார்களில் பிரத்யேக தரை விரிப்புகள், லெதர் சீட்கள், கீலெஸ் எண்ட்ரி சிஸ்டம், பிளூடூத் கனெக்டிவிட்டி, ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரேடியோ மற்றும் யூஎஸ்பி இணைப்பு வசதி ஆகியவை கூடுதலாக தரப்பட்டுள்ளது.

மேலும், கேபின் முழுவதும் நமது எண்ணத்திற்கு ஏற்ப பிரதிபலிக்கும் வகையில் ‘மூட் லைட்டிங்' வசதி தரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மூட் லைட்டிங் நிறத்தை தேர்ந்தெடுத்து அமைத்துக்கொள்ளலாம். இதற்காக பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இலவச அவசர கால சாலை உதவித் திட்டம்

கோ மற்றும் கோ-பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் கார்களில் பழுது நீக்க எந்த இடத்திலும் வந்து உதவி வழங்கும் இலவச அவசர கால சாலை உதவித் திட்டத்துடன் (Road Side Assistance) கூடிய இரண்டு ஆண்டு/வரம்பற்ற கிலோமீட்டர்கள் வாரண்டியை வழங்குகிறது டட்சன் நிறுவனம்.

இலவச அவசர கால சாலை உதவித் திட்டம்

இந்த இரண்டு ஆண்டுகள்/வரம்பற்ற கிலோமீட்டர்கள் வாரண்டி காலத்தை இலவச அவசர கால சாலை உதவித் திட்டத்துடன் சேர்த்து 5 ஆண்டுகளாக அதிகரித்துக்கொள்ளும் ஆப்ஷனையும் டட்சன் நிறுவனம் அளிக்கிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக

இதன் மூலம் இந்தியாவிலேயே நீட்டிக்கப்பட்ட வரம்பற்ற கிலோமீட்டர்கள் வாரண்டி காலத்தை அளிக்கும் ஒரே கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது டட்சன் நிறுவனம்.

இஞ்சின்

இந்த கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 67 பிஹச்பி ஆற்றலையும், 104 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இஞ்சினின் ஆற்றல் அதன் பின்சக்கரங்களுக்கு 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் செலுத்தப்படுகிறது.

வண்ணங்கள்

ஸ்கை பிளூ, வெள்ளை, சில்வர், ரூபி ரெட் மற்றும் கிரே ஆகிய 5 வண்ணங்களில் டட்சன் கோ ஹேட்ச்பேக் கார்கள் கிடைக்கின்றன.

ரூபி ரெட், கோல்டு, வெள்ளை, சில்வர் மற்றும் கிரே ஆகிய 5 வண்ணங்களில் டட்சன் கோ-பிளஸ் மல்டி யுடிலிட்டி கார்கள் கிடைக்கின்றன.

விலைவிவரம்

ஸ்பெஷல் எடிஷன் டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் ரூ.4.19 லட்சம் என்ற விலையிலும், கோ-பிளஸ் கார் ரூ.4.9 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது. (டெல்லி எக்ஸ்-ஷோரும் விலை அடிப்படையில்)

மைலேஜ்

டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் லிட்டருக்கு 17 கி.மீட்டரும், 7 சீட் கொண்ட கோ-பிளஸ் கார் நகரங்களில் 17.0 கி.மீட்டரும், நெடுஞ்சாலைகளில் 20.63 கி.மீட்டரும் மைலேஜ் கிடைக்கிறது.

ஆரம்ப நிலை விலை கொண்ட கார்களில் கவனம் செலுத்தும் டட்சன் நிறுவனத்தின் கோ மற்றும் கோ-பிளஸ் கார்கள் டிசைன், சிறப்பம்சங்கள், செயல்திறன்,மைலேஜ் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன. 

தற்போது கூடுதல் சிறப்புகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிஷன் டட்சன் கார்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Datsun launches special edition go and go+ cars on 3rd anniversary for Datsun india ltd. price, mileage, specs and more
Please Wait while comments are loading...

Latest Photos