டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்!

Written By:

டொயோட்டா இன்னோவா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது டிசி டிசைன்ஸ் நிறுவனம். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன்டீரியர் பேக்கேஜ்களை விட இது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் சொகுசு அம்சங்களை ஒருபடி மேலே எடுத்துச் செல்லும் வகையில் வந்திருக்கும் இந்த பேக்கேஜ் குறித்த படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லாஞ்ச் அல்டிமேட் என்ற பெயரில் இந்த புதிய பேக்கேஜை டிசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வெளிப்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன் தனித்துவம் இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, டிசி டிசைன் லோகோ பொருத்தப்பட்ட க்ரில், சைடு போர்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில்தான் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கைகள் நீக்கப்பட்டு, இரண்டு சொகுசான புஷ் பேக் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. தாராள இடவசதியுடன், உயர் தர லெதர் கவர் செய்யப்பட்டிருப்பதால், மிக சொகுசான பயண அனுபவத்தை இந்த இருக்கைகள் தரும்.

முன் வரிசை தனியாக பிரிக்கப்பட்டு நடுவில் தடுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், அந்த தடுப்பில் பின்புற பயணிகளின் வசதிக்காக பெரிய அளவிலான டிவி திரை ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது.

 

சிறிய குளிர்சாதனப் பெட்டி, மடக்கி விரிக்கும் வசதி கொண்ட டேபிள் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கதவுகள், தடுப்பு மற்றும் தரைப்பகுதியில் மர தகடுகள் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

சூரிய வெளிச்சத்தை உள்ளே வர விடாமல் தடுப்பதற்கான தானியங்கி முறையில் செயல்படும் திரை மறைப்பு வசதியும் உண்டு. தடுப்பில் பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இருக்கைகளில் இருக்கும் தொடு உணர் பட்டன்கள் மூலமாக பொழுதுபோக்கு சாதனங்கள், இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கஸ்டமைஸ் பேக்கேஜுக்கான விலை குறித்த விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ரூ.4.5 லட்சம் விலையில் இந்த கஸ்டமைஸ் வசதியை டிசி நிறுவனம் செய்து தரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

English summary
DC Introduces New Customise Package For Toyota Innova Crysta.
Please Wait while comments are loading...

Latest Photos