குறைந்தபட்சமாக இந்த பாதுகாப்பு அம்சங்கள் உங்கள் காரில் இருந்தால் தான் நீங்கள் சேஃப்..!

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் எது என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதனை இந்த தொகுப்பில் காணலாம்.

Written By:

நாம் பயன்படுத்தும் காரானது நம்முடைய பயணத்திற்கானது மட்டும் அல்ல, அதையும் மீறி அதில் நம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்பும் நிறைந்துள்ளது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும்.

நம்முடைய குடும்பத்தினரும் பயணிக்கும் காரானது, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததுதானா என்ற கேள்வி எழலாம்.

நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நம் காரில் சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து தொடர்ந்து காணலாம்.

பாடி பேனல்கள்

எந்த ஒரு காருக்கும் பாதுகாப்பை முதலில் அளிப்பது வலுவான, தரமுடைய பாடி பேனல்கள் தான். இதற்காக தற்போது வெளிநாடுகளில் உள்ளதைப்போன்ற கிராஷ் டெஸ்ட் மையங்கள் நம்மூரிலும் அமைக்கப்படுகின்றது.

பாடி பேனல்கள்

தரமான பாடி பேனல்கள் உங்கள் கார் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை கார் நிறுவனத்தாரிடம் முதலில் கேட்டுத்தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

பாடி பேனல்கள்

அப்படி தரமான கட்டமைப்பு இல்லாத காரானது, விபத்தில் சிக்கும் சமயத்தில் முற்றிலும் உருக்குலைந்து அதில் பயணிக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

ஏபிஎஸ்

ஏபிஎஸ் ஆனது பிரேக் செய்யும் பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சுழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது.

ஏபிஎஸ்

திடீரென பிரேக் பிடிக்கும் பொழுது வாகனம் நிலை தடுமாறிவிடும். ஆனால் ஏபிஎஸ் பயன்படுத்தப்பட்ட வாகனம் நிலை தடுமாறுவது தடுக்கப்படும்.

ஏபிஎஸ்

சாதாரன பிரேக்கை விட அதற்கு  முன்பான தூரத்திலே வாகனத்தை நிறுத்திவிடலாம். வளைவுகளில் இயல்பாக வாகனத்தை இயக்க முடியும். மழை காலங்களில் ஈரமான சாலைகள் மற்றும் சறுக்கலான சாலைகளிலும் இயல்பாக பயணிக்க உதவும். இப்படி பல நன்மைகள் இதில் உள்ளது.

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்

பாதுகாப்பான டிரைவிங்கை உறுதிப்படுத்த ஓட்டுநருக்கு உதவும் ஒரு அற்புதமான தொழில்நுட்பம் இது.

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்

வாகனத்தின் கண்ட்டோல் சிதறிச் செல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் இதனை சென்சார்கள் உறுதிப்படுத்துகின்றன, அப்படி தவறான அம்சங்கள் தென்பட்டால் தானாகவே செயல்பட்டு பிரேக்கை அப்ளை செய்கிறது இந்த தொழில்நுட்பம்.

ஏர் பேக்குகள்

விபத்தில் சிக்கினால் காரில் உள்ளவர்களின் உயிரை பாதுகாப்பதில் ஏர் பேக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஏர் பேக்குகள்

கார் விபத்தில் சிக்கினால் ஏர் பேக்குகள் தானாக விரிவடைந்து காரின் சிதறல்கள் நம்மீது படாமலும், காயம்படாமல் பாதுகாப்பதிலும் ஏர் பேக்குகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.

ரியர் வியூ கேமரா

கார் விபத்தில் சிக்கினால் ஏர் பேக்குகள் தானாக விரிவடைந்து காரின் சிதறல்கள் நம்மீது படாமலும், காயம்படாமல் பாதுகாப்பதிலும் ஏர் பேக்குகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.

ரியர் வியூ கேமரா

இதன் மூலம் ரிவர்ஸ் எடுக்கும் போது எதிலும் அடிபடாமல் காரை பாதுகாப்பதுடன், காரால் யாரும் காயமடையாமலும் காக்க முடிகிறது.

லேன் கீப்பிங் அஸிஸ்ட்

இது ஒரு புதிய தலைமுறை பாதுகாப்பு அம்சம் ஆகும். பாதுகாப்பான டிரைவிங் என்பது ஒழுக்கமாகவும் ஒரே சீராகவும் ஒரே லேணில் காரை செலுத்துவதே ஆகும்.

லேன் கீப்பிங் அஸிஸ்ட்

ஒரு லேணில் இருந்து மற்றொரு லேணுக்கு மாறும் போது லேன் கீப்பிங் அஸிஸ்ட் தொழில்நுட்பம் ஓட்டுநருக்கு எச்சரிப்பதுடன், நாம் பயணிக்கும் லேணிற்கு மெதுவாக மீண்டும் காரை செலுத்த உதவுகிறது.

பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன்

மேற்கூறியதைப் போலவே இதுவும் ஒரு புதிய தலைமுறை தொழில்நுட்பமே. இது அதிக விலை கொண்ட கார்களில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தாலும் இதன் பயன் அளப்பரியது.

பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன்

ஓட்டுநரின் பார்வைக்கு புலப்படாத பகுதிகள் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகிறது. அந்த பகுதிகளில் இருந்து கார், அல்லது வேறு ஏதாவது பொருள் மீது இடிட்துவிடாமல் இது ஓட்டுநருக்கு எச்சரிக்கை அளிக்கிறது.

இவை மட்டும் அல்லாது, கொலிஷன் அவாய்டிங் சிஸ்டம், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பெடஸ்டிரியன் சேஃப்டி டிசைன், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ஹெட்ஸ்-அப்-டிஸ்பிளே என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் கார்களுக்கானதே.

எனினும், இவை அதிக விலை கொண்ட கார்களில் இருக்கக்கூடிய விலையுயர்ந்த தொழில்நுட்பங்களாகும். மேலும் இவை இந்தியாவில் அதிக மாடல்களில் கொடுக்கப்படுவதும் இல்லை.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Sunday, May 14, 2017, 9:10 [IST]
English summary
Read in Tamil about safety features in cars.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK