பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் வாகனம் அறிமுகம்

ஈச்சர் பொலாரிஸ் நிறுவனத்தின் மல்டிக்ஸ் வாகனம் தற்போது பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற இஞ்சின்களுடன் அறிமுகமாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இந்தியாவின் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனமும் அமெரிக்காவின் பொலாரிஸ் நிறுவனமும் இணைந்து மல்டிக்ஸ் வாகனங்களை தயாரித்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்துவருகின்றன. தற்போது பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு சான்று பெற்ற இஞ்சின்களுடன் புதிய மல்டிக்ஸ் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

இந்தியாவின் முதல் தனி பயன்பாட்டு ( பெர்சனல் யுடிலிட்டி ) வாகனம் என அடையாளப்படுத்தப்பட்ட வாகனம் மல்டிக்ஸ் ஆகும். இவற்றை மக்கள் பயன்பாடு, சரக்குப் பயன்பாடு மற்றும் மின் உற்பத்தி என மூன்று விதமாக உபயோகிக்கலாம்.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

பொதுவாக மக்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், சரக்குகள் ஏற்றும் வாகனங்கள் என தனித்தனியாக உள்ளன. இந்த மல்டிக்ஸ் வாகனத்தை இரண்டு தேவைகளுக்குமே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். மேலும் கூடுதலாக இதன் மோட்டாரில் இருந்து மின் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கும் பயன் தரக்கூடியதாகும்.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

மல்டிக்ஸ் வாகனத்தில் 5 பேர் பயணிக்கலாம், இதில் நான்கு கதவுகள் உள்ளன. பின்புறம் உள்ள பகுதியில் சரக்குகளையும் ஏற்றிக்கொள்ளலாம். இதன் பின்புறம் ஸ்மார்ட் எக்ஸ் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்சாரத்தையும் எடுத்துகொள்ளலாம்.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

கிராமப்பகுதிகளில் பவர் கட் என்பது அடிக்கடி சகஜமாக நடக்கக்கூடியதே, மல்டிக்ஸ் வாகனத்தை இயக்கும் போது அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை கொண்டு குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம் அல்லது தண்ணீர் பம்ப் போன்றவைகளை இயக்கிக்கொள்ளலாம்.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வாகனங்களும் பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற இஞ்சின்களுடன் தயாரிக்கப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் தற்போது புதிய மஸ்டிக்ஸ் வாகனத்தை பிஎஸ்4 கட்டுப்பாடுகள் படி தயாரித்துள்ளது ஈச்சர் பொலாரிஸ் நிறுவனம்.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

மல்டிக்ஸ் வாகனங்கள் ராஜஸ்தானில் உள்ள குகாஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் மொத்த எடை 650 முதல் 750 கிலோவாகும்.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

மல்டிக்ஸ் வாகன டீலர்களின் எண்ணிக்கையை இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டிற்குள்ளாக விரிவடையச் செய்ய ஈச்சர் பொலாரிஸ் திட்டம் தீட்டியுள்ளது. இதன் மூலம் 150 நகரங்களில் மல்டிக்ஸ் வாகனங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

மல்டிக்ஸ் வாகனங்கள் ஏக்ஸ்+ மற்றும் எம்எக்ஸ் என இரு வேரியண்டுகளில் கிடைக்கின்றன. இதன் விலை முறையே ரூ. 3.19 லட்சம் மற்றும் ரூ. 3.49 லட்சம் என நிர்னயிக்கப்பட்டுள்ளது. 4 வண்ணங்களில் இவை கிடைக்கின்றன.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

இவை எந்த நிலப்பரப்பிலும் செல்லும் வகையில் வடிவமைப்பு மற்றும் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ்சும் உள்ளது. ரோல் ஓவர் எனப்படும் பாதுகாப்பு அம்சம் இதில் உள்ளது. இவை சாலையில் செல்லும் போது வாகனத்தை பிறழாமல் பாதுகாக்கின்றது.

பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய மல்டிக்ஸ் அறிமுகம்!

இதில் 652சிசி ஒற்றை சிலிண்டர் கொண்ட இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 12.74 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். லிட்டருக்கு 28.45 கிமீ என்ற சிறந்த மைலேஜையும் அளிக்கின்றது மல்டிக்ஸ்.

மஹிந்திரா பஜா எஸ்ஏஇ இந்தியா வாகனத்தின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்:

Most Read Articles
English summary
Eicher Polaris plans to expand its dealership network to over 150 towns by Q3 of 2017 with the BS IV compliant Multix variants.
Story first published: Saturday, March 4, 2017, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X