புதுப்பொலிவுடன் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் இந்தியாவில் அறிமுகம்!

ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவின் ஹைபிரிட் மாடல் காரான கேம்ரி புதுப்பொலிவுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

கேம்ரி ஹைபிரிட் செடன் காரின் வெளிப்புறம் சிற்சில மாற்றங்கள் கண்டுள்ளது, முகப்பு விளக்கு எல்ஈடி ஃபாக் விளக்குகளுடன் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளது, மற்றும் புதிய 15 இஞ்ச் ஸ்போக் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

பயணிகள் பாதுகாப்புக்காக 9 ஏர் பேக்குகள், நேவிகேசனுக்கான புதிய இண்டர்ஃபேஸ், 12
ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், வயர்லஸ் சார்ஜிங் வசதி, டயரில் உள்ள காற்றின் அளவு குறித்து அறியும் வசதி, கார்னர் சென்சர்களுடன் கூடிய பார்க்கிங் கேமரா மானிட்டர், மற்றும் ஆபத்து கால பிரேக் சிக்னல் வசதி ஆகியவை உள்ளது.

கேம்ரி காரில், 202 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

குறைந்த வேகத்தில் செல்லும் போது எலெக்ட்ரிக் மோடில் இயங்கும் கேம்ரி, அதிவேகத்தில் பயணிக்கையில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் தொழிநுட்பம் கலந்த மோடில் இயங்கும். இது பிரேக்கை உபயோகிக்கும் போது தனது பேட்டரிக்களை தானே சார்ஜ் செய்து கொள்ளும் தொழில்நுட்பமும் இந்த காரில் உள்ளது.

இந்த ஹைபிரிட் கார் லிட்டருக்கு 19.16 கிமீ என்ற சிறந்த மைலேஜ் தருகிறது. 0-100கிமீ வேகத்தை 9.2 நொடிகள் நேரத்தில் எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டொயோட்டா கேம்ரி ரூ.31.98 ( டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில்) கிடைக்கிறது. ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய அரசு மானியம் அளித்து உதவுவதன் காரணமாக கேம்ரி ஹைபிரிட் மாடலின் விலை மற்ற நிறுவன மாடல்களுடன் போட்டி போடும் வகையில் அமைந்துள்ளது.

மெர்சிடஸ் மேபக் ஜி650 லாண்டலெட் சொகுசு எஸ்யுவி காரின் உயர்தர படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Toyota has launched the facelifted Camry in India with added interior features and a slight design change.
Please Wait while comments are loading...

Latest Photos