ஃபாரடே ஃப்யூச்சர் எஃப்எஃப்91 எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு!

Written By:

மின்சார கார்கள் என்றால் வாடிக்கையாளர்கள் ஓடி ஒளியும் காலம் இருந்த நிலையை தொழில்நுட்ப வளர்ச்சி அடியோடு மாற்றிவிடும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு சான்றாக அமைந்துள்ளது ஃபாரடே ஃப்யூச்சர் மின்சார எஸ்யூவிக்கான வரவேற்பு.

அமெரிக்காவில் நடந்து வரும் சிஇஎஸ் மின்னணு தொழில்நுட்ப கண்காட்சியில் ஃபாரடே ஃப்யூச்சர் FF91 மின்சார எஸ்யூவிக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், அறிமுகம் செய்யப்பட்டு முதல் 36 மணிநேரத்திற்குள் 64,000 முன்பதிவுகளை பெற்று மலைக்க வைத்துள்ளது.

இந்த எஸ்யூவிக்கு இந்தளவு வரவேற்பு கிடைத்தற்கான காரணம் என்ற தெரியுமா? இந்த எஸ்யூவியின் ஆற்றல் வாய்ந்த பேட்டரியும், சக்திவாய்ந்த மின்மோட்டார்களும்தான். அத்துடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரம் பயணிக்கும் என்பதே இந்தளவு வரவேற்பை பெற்றதற்கான காரணம்.

இந்த எஸ்யூவி ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடும். அதாவது, பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட உலகின் அதிவேக சூப்பர் கார்களையே இதன் திறன் விஞ்சுவதாக இருக்கிறது.

இதுவரை விலை பற்றிய அறிவிப்பு இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு செய்வதற்கு இரண்டு விதமான தேர்வுகளை ஃபாரடே நிறுவனம் வழங்குகிறது.

5,000 டாலர்கள் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பையும், முன்பணம் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பையும் ஃபாரடே நிறுவனம் வழங்குகிறது. 5,000 டாலர் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதல் லாட்டிலேயே ஃபாரடே எஸ்யூவியை பெறுவதற்கான வாய்ப்பை பெறுவர்.

முன்பணம் செலுத்தி முதல் லாட்டில் இந்த எஸ்யூவியை பெற முடியாதவர்களுக்கு முன்பணம் திருப்பித் தரப்படும். முன்பணம் இல்லாமல் முன்பதிவு செய்பவர்களுக்கு வழக்கமான நடைமுறைகளின்படி, கார் டெலிவிரி வழங்கப்படும்.

முன்பதிவுக்கு வாடிக்கையாளர்கள் ரணகளப்பட்டு வரும் நிலையில், இந்த காரின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் உற்பத்திக்கு செல்ல இருக்கிறது. அதன்பிறகுதான் வாடிக்கையாளர்கள் டெலிவிரி பெற முடியும். எனவே, இப்போதுள்ள நிலையை வைத்து பார்க்கும்போது இந்த காருக்கான காத்திருப்பு காலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் என தெரிகிறது.

மறுபுறத்தில் ஃபாரடே நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உற்பத்தி ஆலைக்கு வழங்க வேண்டிய வாடகையை கூட கட்ட முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி இந்த எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு கவனிக்கத்தக்கதாகவே இருக்கிறது.

சக்திவாய்ந்த மின்சார கார் தயாரிப்பில் கொடி கட்டி பறக்கும் டெஸ்லா கார் நிறுவனத்திற்கு ஃபாரடே கார் நிறுவனத்தின் வருகை நிச்சயம் பெரிய நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், டெஸ்லாவிடம் இருந்து இந்த நெருக்கடியை சமாளிக்க என்ன திட்டம் இருக்கிறது என்பதை அறியவும் ஆட்டோமொபைல் உலகம் ஆவலுடன் காத்துக் கிடக்கிறது.

ஃபாரடே ஃப்யூச்சர் எஸ்யூவியின் படங்கள்!

முன்பதிவில் அசத்தி வரும் ஃபாரடே எஸ்யூவியின் படங்களை முழுமையாக கண்டு மகிழ கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்யவும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Faraday Future has revealed the electric SUV, the FF91 at the 2017 Consumer Electronic Show and the electric vehicle has received over 64,000 bookings in just 36 hours.
Please Wait while comments are loading...

Latest Photos