ஃபியட் கார்களின் விலை அதிரடியாக குறைப்பு... விற்பனை சூடுபிடிக்குமா?

Written By:

தரமான கட்டுமானம், சிறந்த எஞ்சின்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஃபியட் கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இல்லை. போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய மார்க்கெட்டில் பின்தங்கி நிற்கின்றன. ஃபியட் கார்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்தும், அது விற்பனையில் பிரதிபலிக்கவில்லை.

ஃபியட் நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை உள்ளிட்ட காரணங்களே மார்க்கெட்டில் பின்தங்கியதற்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தனது கார்களின் விலையை ஃபியட் இந்தியா நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.

புன்ட்டோ எவோ பெட்ரோல் மாடல்

ஃபியட் புன்ட்டோ, லீனியா ஆகிய கார்களின் விலை இப்போது ரூ.77,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புன்ட்டோ எவோ 1.2 லிட்டர் டைனமிக் மாடலின் விலை இப்போது ரூ.5.45 லட்சம் என்ற மிக சவாலான விலையில் துவங்குகிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் ஃபியட் புன்ட்டோ எவோ கார் இப்போது சிறந்த தேர்வாக மாறியிருக்கிறது. ரூ.5.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஃபியட் புன்ட்டோ எவோ பெட்ரோல் காரின் டைனமிக் வேரியண்ட் ரூ.5.45 லட்சம் விலையில் கிடைக்கும்.

புன்ட்டோ எவோ டீசல் மாடல்

ரூ.6.81 லட்சம் விலையில்[ரூ.40,568 குறைவு] விற்பனை செய்யபப்பட்டு வந்த புன்ட்டோ எவோ காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆக்டிவ் மாடல் இபப்போது ரூ.6.40 லட்சம் [ரூ.41,117 குறைவு] விலையில் கிடைக்கிறது. ரூ.7.47 லட்சம் விலையில் விற்கப்பட்ட டீசல் டைனமிக் வேரியண்ட் ரூ.7 லட்சம் விலையிலும்[ரூ.47,365 குறைவு], ரூ.7.92 லட்சம் விவையில் விற்கப்பட்ட டீசல் எமோஷன் வேரியண்ட் ரூ.7.55 லட்சம் விலையிலும்[ரூ.37,263 குறைவு] கிடைக்கும்.

ஃபியட் லீனியா பெட்ரோல் மாடல்

இதேபோன்று, ரூ.7.82 லட்சம் விலையில் விற்கப்பட்ட ஃபியட் லீனியா காரின் விலை 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆக்டிவ் மாடலின் விலை ரூ.7.25 லட்சம்[ரூ.57,126 குறைவு] விலையில் கிடைக்கிறது. இதன்மூலமாக, இந்த செக்மென்ட்டில் மிக சிறந்த தேர்வாக மாறியிருக்கிறது. ரூ.10,46,747 விலையில் விற்கப்பட்ட டிஜெட் பெட்ரோல் மாடலின் எமோஷன் வேரியண்ட் இப்போது ரூ.9.90 லட்சம்[ரூ.56,747] விலையில் கிடைக்கிறது.

ஃபியட் லீனியா டீசல் மாடல்

ரூ.8,99,570 விலையில் விற்கப்பட்டு வந்த லீனியா டீசல் மாடலின் ஆக்டிவ் வேரியண்ட் இப்போது ரூ.8,70,000 விலையில் கிடைக்கிறது. டீசல் டைனமிக் வேரியண்ட் ரூ.9,95,407 என்ற விலையில் இருந்து ரூ.9.40 லட்சம் என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக லீனியா டீசல் மாடலின் எமோஷன் வேரியண்ட்டின் விலை ரூ.10,76,121லிருந்து ரூ.9.99 லட்சம்[ரூ.77,121] என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஃபியட் அவென்ச்சுரா

ஃபியட் அவென்ச்சுரா காரின் 1.4 லிட்டர் டிஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட அபார்த் மாடலின் விலை ரூ.10,36,678லிருந்து ரூ.9.99 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7.87 லலட்சம் விலையில் விற்கப்பட்ட டீசல் ஆக்டிவ் மாடல் இனி ரூ.7.25 லட்சம் விலையில் கிடைக்கும். டீசல் டைனமிக் மாடல் ரூ.8.69 லட்சத்திலிருந்து ரூ.8.05 லட்சமாக குறைக்கப்பட்டுளளது. டீசல் எமோஷன் மாடலின் விலை ரூ.9.28 லட்சத்திலிருந்து ரூ.8.75 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ந் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக ஃபியட் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நடவடிக்கை வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் கேலரி!

இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள வரும் புத்தம் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, January 6, 2017, 10:21 [IST]
English summary
Prices of the entire range of Linea have been brought down to under Rs 10 lakh; price cut will be with immediate effect in the range of 7 to 7.3 percent.
Please Wait while comments are loading...

Latest Photos