புதிய ஃபியட் புன்ட்டோ எவோ பியூர் கார் ரூ.4.92 லட்சம் விலையில் அறிமுகம்..!

Written By:

ஃபியட் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடலான புதிய புன்ட்டோ எவோ பியூர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

எஃப்சிஏ என்று செல்லமாக அழைக்கப்படும் இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

உலகின் 7வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஃபியட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய புன்ட்டோ எவோ பியூர் இந்தியாவில் அந்நிறுவனத்தின் ஆரம்ப விலை கொண்ட காராக இருக்கும்.

புன்ட்டோ எவோ சீரீஸின் புதிய வேரியண்டான இந்த கார், முன்னதாக இருந்த புன்ட்டோ பியூர் காருக்கு மாற்றாக இருக்கும்.

எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் அழகிய டிசைனுடன் இருக்கிறது இந்த புதிய புன்ட்டோ எவோ பியூர். முகப்பில் ஃபியட்டின் ஆஸ்தான மேற்புறம் வரை நீளும் ‘ரெயிண்டீர்' ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. கிரோம் ஃபினிஷிங் செய்யப்பட்ட ஃபாக் லைட்டு பேனல்கள் கவர்ச்சியை மேலும் கூட்டுகிறது.

பானெட்டின் மீது க்ரீஸ் கோடுகள், கிரில் டிஸைன் என பழைய புன்ட்டோவைவிட புதிய புன்ட்டோ எவோ காரை விட புதிய வேரியண்டை மேலும் மெருகேற்றியிருக்கிறது ஃபியட் நிறுவனம்.

இஞ்சின்

புதிய புன்ட்டோ எவோ பியூர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் தரப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 68 பிஎஸ் ஆற்றலையும், 96 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

வண்ணங்கள்

இந்த புதிய புன்ட்டோ எவோ பியூர் கார் சிவப்பு, கருப்பு, சாம்பல், வெள்ளை, வெண்கலம் மற்றும் அடர் சாம்பல் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த காரின் டோர் ஹேண்டில்கள், வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள், வீல் கேப்ஸ் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வண்ணம் பெற்றுள்ளன. இவை காருக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.

மேலும், இதன் உட்புறம் ஸ்லீக்காக காட்சியளிப்பட்தோடு, அதிக இடவசதி கொண்டதாகவும் உள்ளது. இதில் ஹைட்ராலிக் பவர் ஸ்டீரிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய காருக்கு 3 வருட வாரண்டியை ஃபியட் நிறுவனம் அளிக்கிறது. (ஒவ்வொரு 15,000 கிமீ இடைவெளியில்)

புதிய புன்ட்டோ எவோ பியூர் கார் நகர சாலைகளில் லிட்டருக்கு 17 கிமீ-ரும், நெடுஞ்சாலைகளில் 20 கிமீ மைலேஜ் தரும் என்று ஃபியட் நிறுவனம் கூறுகிறது.

இந்த புதிய புன்ட்டோ எவோ பியூர் கார் ரூ.4..92 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற விலையில் கிடைக்கிறது. நிசான் மைக்ரா காருடன் இந்த கார் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Fiat launches all new punto evo pure in india. price, mileage, specs and more in tamil.
Please Wait while comments are loading...

Latest Photos