ஃபோர்ஸ் இந்தியா தயாரித்துள்ள ஃபார்மூலா ஒன் போட்டிக்கான பிங்க் நிறக்கார்!

ஃபார்மூலா ஒன் கார் பந்தயங்களுக்கான ரேஸ் காரை ஃபோர்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது, அதுகுறித்த தகவல்கள் இனி

By Azhagar

இந்தாண்டிற்கான ஃபார்மூலா கார் பந்தயங்களில் பங்கெடுக்கவுள்ள ஃபோர்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2017 VJM10 ரேஸ் கார் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

2017 VJM10 காரின் செயல்பாடுகளை விட அதனுடையே இளச் சிவப்பு நிறமே தற்போது, ஆட்டோமொபைல் உலகின் ஒரு விவதாப் பொருளாக மாறியுள்ளது.

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

நீர்மேலாண்மை தொழில்நுட்பத்தை கையாளும் ஆஸ்ட்ரியா நிறுவனமான BWTயின் ஸ்பேன்சர்ஷிப்பை ஃபோர்ஸ் இந்தியா கைப்பற்றியுள்ளது.

அதற்கான விளம்பரத்திற்காகவே தனது 2017 VJM10 ரேஸ் காரில் பிங்க் நிறத்தில் தயாரித்துள்ளதாக ஃபோர்ஸ் இந்தியா தெரிவிக்கிறது.

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

ஒருவாரத்திற்கு முன்பு இதே பந்தயத்திற்காக ஃபோர்ஸ் இந்தியா வெளியிட்ட VJM10 என்ற கார், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், VJM10 ரேஸ் கார் பார்சிலோனாவின் 2 ரெஸ்ட் டிரைவுகளையும் நிறைவு செய்தது.

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

ஆனால் தற்போது நிறம் மாற்றம் செய்யப்பட்டுயிருப்பதை குறித்து ஃபோர்ஸ் இந்தியா குழுவின் தலைவராக உள்ள விஜய் மல்லையா கூறும்போது "பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாக இந்தாண்டிற்கான ஃபார்மூலா ஒன் பந்தயங்களை BWT உடன் இணைந்து ஃபோர்ஸ் இந்தியா வழங்குவதில் பெருமை கொள்கிறது. கடந்த நாட்களில் நாங்கள் ஒற்றுமையுடன் ஒரே குழுவாக இருந்து சிறந்த முறையில் செயல்பட்டுள்ளோம்".

"தற்போது ரேஸ் காரில் கலரை மாற்றியிருப்பது என்பது BWT உடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கான அடையாளமாக பார்க்கிறோம். நிற மாற்றத்தை BWT அமோதித்து வரவேற்பு அளித்துள்ளது" என்று மல்லையா கூறினார்.

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

அதிக செயல்திறனை வழங்கும் வகையில் தயாராகியுள்ள தி ஃபோர்ஸ் இந்தியாவின் VJM10 ரேஸ் கார், மெர்சடீஸ் எஞ்சினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 24ம் தேதி ஆஸ்திரேலியாவின் கிராண்ட் பிக்ஸ் பந்தயத்தில் இளச் சிவப்பு நிறத்திலான 2017 VJM10 கார் இடம்பெறவுள்ளது.

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

தனது நிறுவன வளர்ச்சிக்காக 9,000 கோடி ரூபாயை கடனை வாங்கி, நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ள விஜய் மல்லையா, தற்போது பெண்களுக்கு பிடித்த நிறத்தில் ரேஸ் காரை வெளியிட்டுள்ளார்.

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

ஏற்கனவே தனது நிறுவனங்களுக்கான பொருட்களில், பெண்களை மையப்படுத்தி விளம்பரங்களை உருவாக்குவது விஜய் மல்லையாவின் வழக்கம், அதேபோல தற்போது VJM10 ரேஸ் காரையும் பெண்களை கவரும் இளச்சிவப்பு நிறத்திலே வெளியிட்டுள்ளார்.

ஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்

ஃபோர்ஸின் VJM10 ரேஸ் காரில் , VJM என்பது விஜய் மல்லையா பெயரின் சுருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சடிஸின் புதிய AMG GT R ஸ்போர்ட்ஸ் கார், வி8 எஞ்சினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் விற்பனைக்கு வரவுள்ள AMG GT R அசத்தலான புகைப்படங்களை கேலரியில் பாருங்கள்.

Most Read Articles
English summary
This Is No Joke! Force India Reveals Shocking New Pink Livery For 2017 F1 Car Force India has revealed a vibrant new pink livery for its 2017 F1 race car.
Story first published: Wednesday, March 15, 2017, 16:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X