இந்த ஆண்டு இரண்டு புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்கள்!

Written By:

இந்தியாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக களமிறங்கிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மிக வெற்றிகரமான மாடலாக வலம் வருகிறது. ஆனால், மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி வந்த பின்னர் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கூடுதல் சிறப்பம்சங்களுடன் விரைவில் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா நெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கு உடனடி தீர்வாக சில கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாடலில் குறைவான மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு வர இருக்கிறது. அடுத்த மாதம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த மாடலில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை விருப்பத்தின் பேரில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிட்டும். இதுதவிர, தொழில்நுட்ப ரீதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் டாப் வேரியண்ட் கிடைப்பதால் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது. டிசைனில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலும் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தீபாவளி பண்டிகை சீசனில் இந்த புதிய மாடல் இந்தியா வர இருக்கிறது.

இந்த மாடலின் டிசைனில் அதிக மாற்றங்களுடன் வருகிறது. புதிய க்ரில் அமைப்பு, புதிய டேஷ்போர்டு அமைபப்பு உள்ளிட்டவை இந்த மாடலில் முக்கிய அம்சங்களாக இருக்கும். வெளிநாடுகளில் விற்பனைக்கு செல்லும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பின்புற கதவில் ஸ்பேர் வீல் இல்லாத நிலையில், இந்திய மாடலில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு வரும்.

அதேநேரத்தில், எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இருக்காது. தற்போது வழங்கப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த மாடல் வருகிறது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றங்கள் செய்யும் நடைமுறையை கார் நிறுவனங்கள் கடைபிடித்து வந்த நிலையில், இப்போது நிலவும் கடும் சந்தைப் போட்டி காரணமாக ஒரே ஆண்டில் இரண்டுமுறை மேம்படுத்தும் புதிய யுக்தியையும் கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி கொடுத்த கடும் நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!

விரைவில் விற்பனைக்கு வரும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Ford EcoSport that is going to be launched next month will feature some minor updates.
Please Wait while comments are loading...

Latest Photos