ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் வசதிகள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், ஏராளமான வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் வசதிகள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடலில் கருப்பு வண்ண கூரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்படடுள்ளன. அகலமான டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்டீரியரிலும் சில மாற்றங்கள் மற்றும் அதிக வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது 8 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்தின் மூலமாக சேட்டிலைட் நேவிகேஷன், ஆடியோ, வீடியோ ப்ளேபேக் வசதி மற்றும் ரியர் வியூ கேமராவிற்கான திரையாகவும் செயல்படும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் இருக்கிறது. இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் மாடலில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் மாடல் 124 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசனின் பெட்ரோல் மாடல் ரூ.10.39 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.10.69 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா ஹெக்ஸா காரின் பிரத்யேக படங்களின் தொகுப்பு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய டாடா ஹெக்ஸா காரின் பிரத்யேக படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் க்ளிக் செய்து காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Ford India has launched the EcoSport Platinum Edition with new features and minor cosmetic upgrades. Price starts at Rs 10.39 lakh ex-showroom Delhi.
Please Wait while comments are loading...

Latest Photos