ஃபிகோ ஸ்போர்ட்ஸ் மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு?

Written By:

ஃபிகோ ஹேட்ச்பேக் மாடலின் ஸ்போர்ட்ஸ் மாடலை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ஃபோர்டு. இது குறித்த தகவல்களை காணலாம்.

இங்கிலாந்தில் கிடைக்கும் ஃபோர்டு கேஏ கருப்பு/வெள்ளை எடிசனுக்கு ஈடாக இந்தியாவில் ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது ஃபோர்டு இந்தியா. இது டைடேனியம் வேரியண்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட மாடலாக வெளியாக உள்ளது.

புதிய ஃபிகோ ஸ்போர்ட்ஸ் மாடலில் 15 இஞ்ச் கருப்பு நிற அலாய் வீல்கள், வசீகரிக்கும் முன்புற கிரில், ரியர் ஸ்பாய்லர், பின் மற்றும் பக்கவாட்டில் ஸ்டைலிஷ் கிராஃபிக்ஸ் என அசத்தலான அம்சங்கள் சேர்க்கப்பட்டு டிரெண்டி லுக் தரப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் சிறப்பாக இருவண்ண கலவை கொண்ட பாடி பெயிண்டிங்குடன், மேற்கூரையும் வேறுபாடான நிறத்தில் வண்ணம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் பார்வைக்கு சிறப்பான தோற்றம் தரும் வகையில் புதிய ஃபிகோ ஸ்போர்ட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டியரிங் வீலுக்கு லெதர் உறை அளிக்கப்பட்டுள்ளதை தவிர உட்புறத்தில், ரெகுலர் மாடலான டைட்டேனியம் வேரியண்டில் உள்ளதைப்போன்றுதான் இதுவும் இருக்கும். எந்த ஒரு சிறப்பம்சமும் கூடுதலாக ஃபிகோ ஸ்போர்ட்ஸ் மாடலில் சேர்க்கப்படவில்லை. விரைவில் இந்தியாவில் ஃபிகோ ஸ்போட்ர்ஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017 புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்:

English summary
The Ford Figo Sports features cosmetic changes and will an addition to the features of the Titanium variant.
Please Wait while comments are loading...

Latest Photos