கிராஷ் டெஸ்ட்டில் மோசமான தர மதிப்பீட்டை பெற்ற ஃபோர்டு மஸ்டாங் கார்!

யூரோ என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார் மிக மோசமான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்று அதன் வாடிக்கையாளர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Written By:

அமெரிக்காவின் புகழ்பெற்ற மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஃபோர்டு மஸ்டாங். பல தசாப்தங்களாக விற்பனையில் இருந்து வரும் ஃபோர்டு மஸ்டாங் கார் தற்போது 6வது தலைமுறை மாடலாக விற்பனையில் உள்ளது.

அமெரிக்காவில் இடதுபுற ஸ்டீயரிங் வீல் அமைப்புடன் விற்பனை செய்யப்பட்ட இந்த மாடலில் வலது புற ஸ்டீயரிங் அமைப்பிலும் வெளியிடப்பட்டு, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வந்தது. மிகவும் தனித்துவமான பாடி ஸ்டைல் கொண்ட இந்த கார் இந்தியர்களையும் வசியம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த கார் முதல்முறையாக ஐரோப்பாவை சேர்ந்த யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமைப்பால் தர ஆய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த ஆய்வு முடிவில் ஃபோர்டு மஸ்டாங் கார் அதிகபட்சமான 5 புள்ளிகளுக்கு வெறும் 2 புள்ளிகளை பெற்று ஏமாற்றம் தந்துள்ளது. இந்த காரில் அவசரகாலத்திற்கான தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் இல்லை என்பதும் மிக மோசமான தர மதிப்பீட்டை பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் காரின் முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த இரண்டு ஏர்பேக்குகளும் போதுமான அளவு விரிவடையாததும் தெரிய வந்தது. இதனால், ஓட்டுனர் மற்றும் முன்வரிசை பயணிக்கு தலைக்கு போதுமான பாதுகாப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் காரின் முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த இரண்டு ஏர்பேக்குகளும் போதுமான அளவு விரிவடையாததும் தெரிய வந்தது. இதனால், ஓட்டுனர் மற்றும் முன்வரிசை பயணிக்கு தலைக்கு போதுமான பாதுகாப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு மட்டுமின்றி, சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்திலும் குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது பயன்படுத்தப்பட்ட 10வயது சிறுவனை போன்ற பொம்மை காரின் சி பில்லரில் மோதி பாதிப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இத்தனைக்கும் கர்டெயின் ஏர்பேக் இருந்தும் அது பலனில்லாததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் காரில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், பாதசாரிகளை கண்டுணர்ந்து செயல்படும் எச்சரிக்கை வசதிகளை சேர்க்க இருப்பதாக என்சிஏபி அமைப்பிடம் ஃபோர்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The American muscle car Ford Mustang has scored a poor safety rating in the Euro NCAP crash tests. The car scored a 2-star safety ratings in the crash tests.
Please Wait while comments are loading...

Latest Photos