எதிர்காலத்தில் உங்கள் கார் எப்படி இருக்க வேண்டும்? தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்கள்

காரின் எதிர்காலம் ஸ்மார்ட் ஃபோன்களை விட மிக வேகமாக இருக்கும். வருங்காலத்தில் கார்களில் இடம்பெறும் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள்.

By Azhagar

தற்போதைய தொழில்நுட்பங்கள் குறித்து பலருக்கும் விழிப்புணர்வு இருந்தாலும், எதிர்காலத்தில் கார் இயக்கம் சார்ந்த செயல்பாடுகளில், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்ன என்பது மிகப்பெரிய ஒரு சுவராஸ்யமான கேள்வி.

இந்த கேள்வியை அடிப்படையாக வைத்து, வருங்கால ஆட்டோமொபைல் உலகில் கார் சார்ந்த செயல்பாடுகளில் அடியெடுத்து வைக்கக்கூடிய சில முக்கிய தொழில்நுட்பங்களை பற்றி கீழே பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட சைகை கட்டுப்பாடு

மேம்படுத்தப்பட்ட சைகை கட்டுப்பாடு

சைகை மூலம் காரின் செயல்பாடுகளை கட்டுபடுத்தும் முறையை ஆடி 2011ம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டது.

எம்.எம்.ஐ என்ற பெயரில் ஆடி கார்களில் உள்ள இந்த முறை பாடல் தேர்வு, தொலைபேசி பயன்படுத்துதல் மற்றும் காரை செலுத்தும் முறை போன்ற தேவைகளுக்காக உள்ளது.

மேலும் கார் இயக்க செயல்பாடுகளை குறித்து, குரல் மூலம் அறிந்துக்கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு மொழிகளை கூட எம்.எம்.ஐ-யில் மாற்ற முடியும்.

ஹெட்-அப் டிஸ்பிளே

ஹெட்-அப் டிஸ்பிளே

காரின் விண்ட்-ஸ்கீரினில் வேகம், நேவிகேஷன் குறித்த அப்டேட்ஸ்களை உடனுக்குடன் தெரிந்தால் எப்படி இருக்கும். அது தான் ஹெட்-அப் டிஸ்பிளே.

இந்த தொழில்நுட்பத்தை தற்போது ஹெட்வோ என்ற செயலியை ஐ-போன்களின் பயன்படுத்தி ஹெட்-அப் டிஸ்பிளேவை கார் கண்ணாடிகளில் கொண்டு வரலாம்.

ஆனால் அவை, அதிக வெளிச்சம் கொண்ட பயணங்களின் போது பயன்தாராது. இருந்தாலும், மேம்படுத்தப்பட்ட வடிவில் ஹெட்-அப் டிஸ்பிளே எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் கார்களில் நிச்சயமாக இடம்பெறும்.

செயலி மற்றும் நிலைபொருள் (Firmware) மேம்படுத்துதல்

செயலி மற்றும் நிலைபொருள் (Firmware) மேம்படுத்துதல்

ஒரு ஸ்மார்ட் ஃபோனில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களை போல ஸ்மார்ட் கார்களில் உருவாக்குவது தான் நிலைபொருள் மேம்படுத்துதல் (Firmware Updates).

காரில் பயணிக்கும் போதே, ஃபோனிலிருக்கும் செயலிகளுடன் நீங்கள் எப்போதும் தொடர்பில் இருக்க முடியும். அழைப்புகள், கானொளி காட்சி போன்ற வசதியை காரில் இருந்தவாறே நீங்கள் பெறலாம். மேலும், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை குறித்த தகவல்களையும் செயலிகள் மூலம் பெறலாம்.

டொயோட்டா நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை தனது ஃபன் கான்செப்ட் காரில் Vehicle, Interactive, Internet (Vii ) என்ற பெயரில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

எடைகுறைந்த பேட்டரிகள்

எடைகுறைந்த பேட்டரிகள்

இனி வரும் காலங்களில் மின்சாரக் காருக்கு பெரியளவில் சந்தை மதிப்பு உயரும் என்பதால், பேட்டரிகளின் தேவை அதிகரிக்கலாம். அதனால் ஒரு காரில் கிட்டத்தட்ட 3 முதல் 5 பேட்டரிகளை வைக்க இடம் தேவைப்படலாம்.

இதனால் கார் பேட்டரிகள் குறைந்த எடையில் தயாரிக்கப்படுவது அவசியமாக உள்ளது. கையடக்க அகலத்தில் காரின் பேனலில் வைக்ககூடிய எடையில் பேட்டரிகள் எதிர்காலத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.

வாகனங்களுக்கு இடையே தொடர்பு

வாகனங்களுக்கு இடையே தொடர்பு

சாலையில் செல்லும் போது வாகனங்கள் சூழலுக்கு ஏற்றவாறு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் தொழில்நுட்பத்தை சாத்தியமாக்க பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

இதனால் நெருக்கமான சாலை மற்றும் டிராஃபிக் நிறுத்தம் போன்றவற்றில் சுமூகமான தீர்வு கிடைக்கும் என்பது பல்வேறு கார் நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வாகனங்களுக்குள் உருவாகும் தொடர்பால் விபத்து நடைபெறாமல் தடுக்கப்பட்டு சாலை பாதுகாப்பு கிடைக்கும். இது மட்டும் சாத்தியமானால் ஆட்டோமொபைல் துறையில் பெரிய புரட்சியாக இருக்கும்.

எரிவாயு சேமிப்பு

எரிவாயு சேமிப்பு

மேற்கூறிய அனைத்து தொழில்நுட்பங்களையும் சாத்தியப்படுத்த எரிவாயு திறன் தான் முக்கிய அவசியம்.

இதனால் எரிவாயு கொள்ளவு பற்றிய உடனடி தகவல்கள் ஸ்பீடோ மீட்டர் டிஸ்பிளேவில் தோன்றினால் எதிர்காலத்தில் கார்களை பயன்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும்.

கார் இணையம் வசதி

கார் இணையம் வசதி

ஜி.பி.எஸ் இணைப்பு மூலம் காரில் நாம் இணைய சேவையை பெற முடியும் தான். தகவல் பரிமாற்ற உலகில் காரில் நாம் செல்லும் போது தேவைப்படும் தகவல்கள் டிராஃபிக் குறித்தது தான்.

இதை கருத்தில் கொண்டு ஆடி Long Term Evolution (LTE) என்ற பெயரில் தனது தயாரிப்புகளில் இணைய சேவையை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

இணைய வானொளி, படங்கள் மூலம் செல்லும் இடங்களை தேடுவது, வேகமாக நகரும் வரைபடங்கள் மற்றும் வைஃபை-ஹாட்ஸ்பாட் போன்ற வசதிகளை LTE மூலம் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

சுயமாறுதல் கொண்ட வண்ணப் பூச்சு

சுயமாறுதல் கொண்ட வண்ணப் பூச்சு

அமெரிக்க அதிபர் போன்ற பெரும் தலைகள் பயன்படுத்தும் கார்களில் கீறல் பட்டால் சுயமாக அதை மாற்றி பழைய தோற்றத்தை தரும் வண்ணப் பூச்சுகள் இருக்கின்றன.

இந்த தொழில்நுட்பம் இன்னும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த வசதி எல்லாருக்கு தேவைப்படக்கூடிய ஒன்று.

ஆனால் ஆழமாக ஏதாவது கீறல் ஏற்பட்டால், அதை நிச்சயம் வண்ணப்பூச்சால் சரிசெய்ய முடியாது. இருந்தாலும் அதைக்கூட சாத்தியமாக்க பல டெக் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

வருங்கால கார்களில் வளரும் தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே சென்றாலும் ஒரு தனிமனிதனின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இதுவரை எந்த தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வருங்கால கார்களில் வளரும் தொழில்நுட்பங்கள்

தேவை இருக்கும் வரை அனைத்து வாழ்வியலுக்கும் ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் இயங்கி வரும். தேவை என்பது தீர்ந்தால், எல்லாம் காணாமல் போய்விடும். ஆனால் தேவை என்றுமே தீராது என்பது தான் உண்மை.

Most Read Articles
English summary
Cars would Have a Lot more Technologies Tha Smart Phones. Click for Read the Future Technologies for Cars...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X