தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணமும், வாகனப் பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விதிமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.

நாடுமுழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக ஓட்டுனர் உரிமம் வழங்குதலும், வாகனப் பதிவு பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்கான கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக உயரத்தியுள்ளது.

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு கட்டணம் உயர்வு!

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்டவற்றிற்கான கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஓட்டுனர் உரிமம் விண்ணப்பித்தவுடன் வழங்கப்படும் பழகுனர் ஓட்டுனர் உரிமத்துக்கு இதுவரை ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.230 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு கட்டணம் உயர்வு!

இருசக்கர வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ.500 ஆகவும், புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமத்தை காலம் கடந்து புதுப்பித்தால் ரூ.300 கட்டணமாகவும், ஓர் ஆண்டுக்கும் மேல் தாமதமாக புதுப்பித்தால் ரூ.1,000 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு கட்டணம் உயர்வு!

அதேபோன்று, இருசக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனஹ்களை பதிவு செய்ய ரூ.1,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு கட்டணம் உயர்வு!

நான்கு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ.350 லிருந்து ரூ.650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, வாகனத் தகுதிச் சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ.550லிருந்து ரூ.1,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு கட்டணம் உயர்வு!

கடன் திட்டம் மூலமாக வாகனங்களை வாங்கியோர், அதை கட்டி முடித்தவுடன் ஹைப்போதிகேஷனை ரத்து செய்வதற்கான கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 99 வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களிலும் இந்த புதிய கட்டண நடைமுறை இன்று அமலுக்கு வருவதாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை அங்குலம் அங்குலமாக இங்கே பார்ப்பதற்கான வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தள வாசகர்கள் பெறலாம்.

Most Read Articles
English summary
Now getting a driving licence or undertaking a driving test will cost you more.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X