ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- விபரம்!

கூடுதல் வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

ஹோண்டா அமேஸ் பிரிவிலேஜ் எடிசன் என்ற பெயரில் இந்த மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டா இமேஸ் காரின் எஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் கூடுதல் வசதிகளுடன் தற்போது பிரிவிலேஜ் எடிசன் என்ற பெயரில் வந்துள்ளது. ஹோண்டாவின் புதிய டிஜிபாட் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

ஹோண்டாவின் புதிய டிஜிபாட் தொழில்நுட்பத்திலான இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக சேட்டிலைட் தொடர்பு வசதி கொணண்ட 3டி நேவிகேஷன், 1.5ஜிபி ஸ்டோரேஜ் திறன் மற்றும் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்வதற்கான வசதிகளும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் வசதிகளாக இருக்கின்றன.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

தவிரவும், வாய்ஸ் கமாண்ட் வசதி, இன்டர்நெட் வசதி, ஹேண்ட்ஸ்ஃப்ரீ வசதி, ஐபாட் மற்றும் ஐபோன் இணஐப்பு வசதி, யுஎஸ்பி போர்ட்டுகளும், மைக்ரோ எஸ்டி கார்டுகளை இணைப்பதற்கான போர்ட்டுகளும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இருக்கின்றன.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் மற்றும் பிரிவிலேஜ் எடிசன் சின்னமும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

ஓட்டுனருக்கான ஆரம் ரெஸ்ட் வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரிவிலேஜ் எடிசன் சின்னம் பொறிக்கப்பட்ட பீயேஜ் வண்ண சீட் கவர்களும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

ஹோண்டா அமேஸ் பிரிவிலேஜ் எடிசன் மாடல் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 88 பிஎச்பி பவரையும், 109 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சினும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

டீசல் மாடலில் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சினும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்று தெரிவிக்கிறது. நடைமுறையில் டீசல் மாடல் மிகச் சிறப்பான மைலேஜை வழங்கும் என்று நம்பலாம்.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

ஹோண்டா அமேஸ் பிரிவிலேஜ் எடிசன் காரின் டீசல் மாடலில் இரண்டு ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், பெட்ரோல் மாடலில் இந்த வசதிகள் இல்லை.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- விபரம்!

ஹோண்டா அமேஸ் பிரிவிலேஜ் எடிசன் மாடலின் பெட்ரோல் மாடல் ரூ.6,48,888 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7,73,631 எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
2017 Honda Amaze Privilege Edition launched in India. Prices for the Honda Amaze Privilege Edition start from Rs 6.49 lakh ex-showroom (Delhi).
Story first published: Wednesday, July 19, 2017, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X