ஹோண்டாவின் பெருமைமிகு அடையாளமாக மாறி வரும் சிட்டி

ஹோண்டா சிட்டி மேம்படுத்தப்பட்ட மாடலிற்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதுகுறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.

Written By:

இந்தியாவில் அறிமுகமான நாள் முதல் ஹோண்டா நிறுவனத்தின் பெயரை காபாற்றி வருவது ஹோண்டா சிட்டி கார் தான்.

சிட்டி மாடலை மெருகேற்றி ஹோண்டா அறிமுகப்படுத்தும் பல மாடல்கள் தொடர்ந்து மக்களிடம் வரவேற்பு பெற தவறுவதில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி செடான் வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த நொடியே 25,000 முன்பதிவுகளை தற்போது இந்த கார் பெற்றுள்ளது.

நடுத்தர அளவுகொண்ட கார்களில் மாருதி சியாஸின் ஆதிக்கத்தை ஹோண்டா சிட்டி வெளியானவுடன் ஆட்டம் கண்டது.

நடுத்தர செடான் வரிசைகளில் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் சரிநிகராக விற்பனையாயின.

ஆனால் கொஞ்ச காலத்தில் சியாஸை தூக்கி சாப்பிட்டு, நடுத்தர செடான் மாடல் கார்களில் சிட்டி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

திறன், ஆற்றல் எல்லாவற்றையும் விட தோற்றம் தான் ஹோண்டா சிட்டி காரை மக்கள் தொடர்ந்து முதல் முக்கிய காரணமாக உள்ளது.

பிறகு செயல்பாடு, எந்த தட்பவெட்ப காலநிலை, ஆஃப் ரோடு என எதற்கும் பயன்படுத்தக்கூடிய வசதி ஹோண்டா சிட்டிக்கு கூடுதலான சிறபம்சத்தை தருகிறது.

பெரும்பான்மையாக நடுத்தர வயது கொண்டவர்கள் மட்டுமில்லாமல், சிட்டி காரை இளைஞர்கள் கூட விரும்புகின்றனர். அதற்கு காரணம் செயல்திறன்.

தோற்றம், ஆற்றல், செயல்திறன் என அனைத்தையும் ஒருங்கே பெற்ற மாடல் என்பதால், ஹோண்டா சிட்டியின் சந்தை நிலவரம் இந்தியாவில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகளிலும் ஹோண்டா சிட்டி அசரடிக்கிறது. பெரிய ஆடம்பர கார்களில் இருக்கவேண்டிய வசதிகள் அனைத்துமே இதில் உள்ளன.

மின்சாரத்தில் இயங்கும் சன்ரூஃப், 7.0 அகலத்தில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெய்மெண்ட் சிஸ்டம், தானாக இயங்கக்கூடிய முகப்பு விளக்குகள், புகை படிந்த தோற்றம் கொண்ட விளக்குகள் போன்றவை ஹோண்டா சிட்டி காருக்கே உரித்தான கட்டமைப்புகள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி இசட்.எக்ஸ் மாடலின் வடிவத்தில் பழைய செயல்பாடுகளுடன் கூடிய இன்னும் மெருகேற்றப்பட்ட அம்சங்கள் புதியதாக சேர்க்கப்பட்டன.

தேவையை அறிந்து தானாக இயங்கும் வைப்பர்கள், டிக்கியை திறக்க உதவும் ஸ்டலான பூட் லிட், அலாய் உடன் கூடிய பெரிய சக்கரங்கள் சிட்டி காருக்கு இன்னும் சிறப்பு சேர்கின்றன.

2017 ஹோண்டா சிட்டி இசட். எக்ஸ் காரின் சில வடிவமைப்புகள் ஹோண்டா சிவிக் மாடலை வைத்து உருவாக்கப்பட்டவை. இதை காரின் பம்பர்கள், அலாய் சக்கரங்களை பார்க்கும் போது நாம் தெரிந்துக்கொள்ள முடியும்.

மேலும் புதிய ஹோண்டா சிட்டி இசட். எக்ஸ் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் அலாய் சக்கரங்கள், பழைய மாடல்களை விட 10 அகலம் பெரிதானவை.

பழைய சிட்டி கார்களில் உள்ள அலாய் வீல்களில் அளவு 15 மிமீ . 2017 ஹோண்டா சிட்டி இசட். எக்ஸ் காரின் அலாய் சக்கரங்களின் அளவு 16 மிமீ.

சக்கரங்கள் பெரிதான தோற்றத்தில் உள்ளதால், புதிய ஹோண்டா சிட்டி கொஞ்சம் மிரட்டலான தோற்றத்துடன் தான் பார்ப்பவர்களை வசீகரிக்க செய்கிறது.

1.5 திறன் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயுக்களில் இயங்கும் அளவில் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டியிக்கான பெட்ரோல் மாடல் கார் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது சி.வி.டி கியர்பாக்ஸ் என 2 தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது.

இதுவே டீசலுக்கான மாடலில் வேறு எந்த தேர்வும் இல்லாதவாறு மேனுவல் பயன்பாடு கொண்ட கியர்பாக்ஸாகத்தான் உள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18 கிலோ மீட்டர் மைலேஜையும். ஒரு லிட்டர் டீசலில் 25.6 கிலோ மீட்டர் மைலேஜையும் தரக்கூடிய வகையில் புதிய ஹோண்டா சிட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, இதில் ABS, பின்பகுதிக்கான பார்கிங் சென்சார், ஆண்டி-தெவ்ஃப்ட் அலாரம் மற்றும் அவசரக்காலத்தில் உதவக்கூடிய விலையில் 6 ஆர் பேக்குகள் உள்ளன.

ரூ.8.49 லட்சம் தொடக்க விலையில் உள்ள ஹோண்டா சிட்டி காரில் விற்பனையில் தேவைக்கு ஏற்றவாறு மாறுபாடு இருக்கும்.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda City sedan cross 25,000 units Bookings. Click for details...
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK