ஹோண்டா கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படுகிறது!

ஏர்பேக் பிரச்னை காரணமாக ஹோண்டா கார் மாடல்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஏர்பேக் பிரச்னை காரணமாக இந்தியாவில் ஹோண்டா கார் மாடல்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. உங்களது காரும் இந்த ரீகால் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு செய்தியை தொடர்ந்து படியுங்கள்.

ஹோண்டா கார்களுக்கு இந்தியாவில் ரீகால்!

ஜப்பானை சேர்ந்த தகட்டா நிறுவனம் சப்ளை செய்த ஏர்பேக்குகளில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனம் சப்ளை செய்த ஏர்பேக் பொருத்தப்பட்ட பல முன்னணி பிராண்டுகளின் கார்கள் தொடர்ந்து திரும்ப அழைக்கப்பட்டு பிரச்னை சரி செய்து தரப்படுகிறது.

ஹோண்டா கார்களுக்கு இந்தியாவில் ரீகால்!

அந்த வகையில், தகட்டா நிறுவனத்தின் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட ஹோண்டா கார் மாடல்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படுகின்றன. கடந்த 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹோண்டா கார்கள் இந்த திரும்ப பெறும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா கார்களுக்கு இந்தியாவில் ரீகால்!

இந்தியாவை பொறுத்தவரையில், 32,456 ஹோண்டா சிட்டி கார்கள் திரும்ப அழைத்து பிரச்னை சரிசெய்து தரப்பட உள்ளன. அதேபோன்று, 7,265 ஜாஸ் கார்களும், 1,200 சிவிக் கார்களும், 659 அக்கார்டு கார்களும் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட உள்ளதாக ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா கார்களுக்கு இந்தியாவில் ரீகால்!

விபத்தின்போது ஏர்பேக் விரிவடையும்போது அது வெடித்து சிதறி ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், அதனை சரிசெய்து தரும் பொருட்டு இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஹோண்டா கார்களுக்கு இந்தியாவில் ரீகால்!

இதுதொடர்பாக, டீலர்கள் வழியாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னை சரிசெய்து தரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களது ஹோண்டா கார் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு உங்கள் காரின் 17 இலக்க வின் நம்பரை இந்த இணையப் பக்கத்தில் உள்ள தேடுபொறி பெட்டியில் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Most Read Articles
English summary
Honda has issued a voluntary recall to replace Takata airbags fitted to its cars in India. Affected cars include the City, Jazz, Civic, and Accord.
Story first published: Wednesday, February 1, 2017, 9:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X