ஹோண்டா டபிள்யூஆர்வி கார் அறிமுக தேதி வெளியானது!

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் அறிமுக தேதி வெளியாகி உள்ளது. அதன் விபரத்தை காணலாம்.

By Saravana Rajan

ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனையில் சுணக்கம் காணப்படுகிறது. இதனை போக்கிக் கொள்ளும் விதத்தில், பல புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அண்மையில் புதிய ஹோண்டா சிட்டி காரை விற்பனைக்கு களமிறக்கியது. அந்த கார் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்ததாக டபிள்யூஆர்வி என்ற க்ராஸ்ஓவர் ரக காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹோண்டா டபிள்யூஆர்வி கார் அறிமுக தேதி வெளியானது!

வரும் மார்ச் 16ந் தேதி ஹோண்டா டபிள்யூஆர்வி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜாஸ் காரின் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஜாஸ் காரில் எஸ்யூவி காரின் டிசைன் தாத்பரியங்களுடன் புதிய மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா டபிள்யூஆர்வி கார் அறிமுக தேதி வெளியானது!

புதிய க்ரில் அமைப்பு, பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், பம்பரில் ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு முரட்டுத் தனமான மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, தரை இடைவெளியும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா டபிள்யூஆர்வி கார் அறிமுக தேதி வெளியானது!

ஹோண்டா ஜாஸ் காரில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள்தான் இந்த புதிய காரிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய காரில் 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஹோண்டா டபிள்யூஆர்வி கார் அறிமுக தேதி வெளியானது!

டீசல் மாடலில் 99 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஹோண்டா டபிள்யூஆர்வி கார் அறிமுக தேதி வெளியானது!

ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும். க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதியும் இருக்கும்.

ஹோண்டா டபிள்யூஆர்வி கார் அறிமுக தேதி வெளியானது!

ஃபியட் அவென்ச்சுரா, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் போன்ற க்ராஸ்ஓவர் கார்களுடனும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களுடன் போட்டி போடும்.

ஹோண்டா டபிள்யூஆர்வி கார் அறிமுக தேதி வெளியானது!

ரூ.6.5 லட்சம் விலையில் இருந்து ரூ.9.5 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஹோண்டா கார் ஆலையில் இந்த காரின் உற்பத்தி துவங்கிவிட்டது. எனவே, கார் அறிமுகம் செய்யப்பட்ட உடனே டெலிவிரியும் துவங்கிவிடும்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் செடான் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Read in Tamil: Honda WR-V - the crossover hatchback is all set to launch in India. What can we expect from the upcoming Honda WR-V? Launch details, variants, and features explained.
Story first published: Saturday, February 25, 2017, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X