இந்தியாவில் ஹோண்டாவின் புதிய டபிள்யூ-ஆர்வி ஆர்வி கார் விற்பனைக்கு அறிமுகம்

ஹோண்டா நிறுவனம் புதிய கிராஸ்ஓவர் மாடலான டபிள்யூ ஆர் வி காரினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஹோண்டா நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான டபிள்யு ஆர் வி மாடல் காரினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரக கலப்பாகும். பல தரப்பினரையும் திருப்திப் படுத்தும் விதத்தில் செக்மெண்டியே சிறந்த காராக விளங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ‘ஜாஸ்' காரின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. டபிள்யு ஆர் வி காரினை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்து விற்பனை செய்யப்படும் முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் உள்ள ஹோண்டா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவால் டபிள்யு ஆர் வி கார் டிசைன் செய்யப்பட்டதாகும்.

கிராஸ்ஓவர் மாடலான இவை ஜாஸ் காரை விட உயரமாகவும் அதிக கிரவுண்ட் கிளியரன்சும் கொண்டதாகும். இந்த அம்சங்கள் மனதில் கொண்டு இந்திய சாலைகளுக்காக பிரத்யேகமாக இந்த புதிய டபிள்யு ஆர்வி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்லீக்கான ஹெட்லைட்டுகள். எல்ஈடி டிஆர்எல்-கள், ஹோண்டா பேட்ஜ் கொண்ட கிரோம் கிரில் என இதன் முகப்பு மிக அகலமாகவும் பொலிவாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

16 இஞ்ச் அலாய் வீல்கள், கிளாடிங் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் கொண்ட முகப்பு பம்பர், எல் வடிவ பின் விளக்கு மற்றும் கிரோம் ஸ்லாட்டில் பொருத்தப்பட்ட பின்பக்க நம்பர் பிளேட் என வெளிப்புற தோற்றம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி காரில் இருக்கக்கூடிய பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாகவே டபிள்யு ஆர் வி காரின் உட்புறம் உள்ளது.

நேவிகேஷன் வசதியுடன் கூடிய 7-இஞ்ச் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இதில் பிளூடூத், வைஃபை, 1.5 ஜிபி இண்டர்னல் மெமரி, 2 யூஎஸ்பி ஸ்லாட்டுகள் மற்றும் ஸ்மார்ட் போன் கனென்க்டிவிட்டிக்கான மிர்ரர் லிங்க் வசதி ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பார்க்கிங் ஏமரா வசதியும் உள்ளது.

 

இரண்டு ஏர்பேக்குகள், பிரேக் விசையை பகிர்ந்து அளிக்கும் ஈபிடி (EBD) தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை டபிள்யு ஆர்வி காரில் ஸ்டேண்டர்டாக உள்ள அம்சங்களாகும்.

இதே போல இதன் டாப் எண்ட் வேரியண்டில் செக்மெண்டிலேயே முதலாவதாக சன் ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பான டிரைவிங்குக்கான க்ரூஸ் கண்ட்ரோல், இஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஸ்மார்ட் கீ எண்ட்ரீ ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா டபிள்யு ஆர் வி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது.

ஹோண்டா ஜாஸ் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் டபிள்யூ ஆர்வி காரில் உள்ளது. இது அதிகபட்சமாக 89 பிஹச்பி ஆற்றலையும், 110 என்எம் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

மேலும், ஹோண்டா சிட்டியில் உள்ள 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் டபிள்யு ஆர்வி மாடலில் உள்ளது. இது அதிகபட்சமாக 99 பிஹச்பி ஆற்றலையும், 200 என்எம் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய டபிள்யூ ஆர்வி கார் கார்னேலியன் ரெட் பேர்ல், ஆர்கிட் ஒயிட் பேர்ல், அர்பன் டைட்டேனியம் மெட்டாலிக், டஃபேடா ஒயிட், கோல்டன் பிரவுன் மெட்டாலிக் மற்றும் அலாபஸ்டர் சில்வர் மெட்டாலிக் ஆகிய ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. கூடுதல் சிறப்பாக இரண்டு இண்டீரியர் டோன்களிலும் இது கிடைக்கிறது.

விலை

புதிய ஹோண்டா டபிள்யூ ஆர்வி கார் ரூ.7.75 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. ( இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை)

விலைப் பட்டியல்:

பெட்ரோல் எஸ் எம்டி - ரூ.7,75,000
பெட்ரோல் விஎக்ஸ் எம்டி - ரூ.8,99,000
டீசல் எஸ் எம்டி - ரூ.8,79,000
டீசல் விஎக்ஸ் எம்டி - ரூ.9,99,000

டபிள்யூ ஆர்வி பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.5 கிமீ மற்றும் டீசல் மாடல் லிட்டருக்கு 25.5 கி.மீட்டரும் மைலேஜ் தருகிறது. இக்காருக்கு ஹோண்டா நிறுவனம் 3 வருடம் வாரண்டி தருகிறது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

புதிய 2017 ஹோண்டா சிவிக் காரின் படங்கள்: 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, March 16, 2017, 18:15 [IST]
English summary
Honda WR-V Launched In India. The all-new Honda WR-V for India is an aggressive crossover SUV based on the Honda Jazz.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK