ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் உற்பத்தி இந்தியாவில் துவக்கம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி க்ராஸ்ஓவர் ரக காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.

Written By:

ஹோண்டா டபிள்யூஆர்வி க்ராஸ்ஓவர் ரக காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஹோண்டா ஆலையில் இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. உற்பத்திப் பிரிவிலிருந்து ஹோண்டா டபிள்யூஆர்வி கார் வெளிவந்திருக்கும் ஸ்பை படங்கள் ஆன்லைன் மீடியாக்களில் வெளியாகி உள்ளன.

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது ஹோண்டா டபிள்யூஆர்வி கார். முன்புறத்தில் க்ரோம் பட்டையுடன் கூடிய பெரிய க்ரில் அமைப்பு. தனித்துவமான ஹெட்லைட் டிசைன் போன்றவை சாதாரண ஜாஸ் காரிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுகிறது.

க்ராஸ்ஓவர் மாடலாக காட்டுவதற்காக பிளாஸ்டிக் சட்டங்கள், வலிமையாக தெரியும் வகையிலான வீல் ஆர்ச்சுகள், ஸ்கிட் பிளேட்டுகள், புதிய முன்பக்க, பின்பக்க பம்பர்கள் என தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட்டுகள் டிசைனும் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் காரைவிட புதிய ஹோண்டா டபிள்யூ ஆர்வி காரின் தரை இடைவெளி வெகுவாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, இந்திய சாலைகளுக்கு ஏற்ற க்ராஸ்ஓவர் மாடலாக இருக்கும்.

ஹோண்டா ஜாஸ் காரின் இன்டீரியர் அமைப்பை இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன்மூலமாக, தயாரிப்பு செலவீனத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சிவிடி கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும் என தெரிகிறது.

ரூ.6.5 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ், ஃபியட் அவென்ச்சுரா அர்பன் க்ராஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The production of the Honda's compact crossover, the WR-V has begun in India. The WR-V is expected to be launched in the Indian market by March 2017.
Please Wait while comments are loading...

Latest Photos