ஹூண்டாய் க்ரெட்டா விலை கணிசமாக குறைந்தது- முழு விபரம்!

ஜிஎஸ்டி வரியின் அடிப்படையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் விபரங்களை பார்க்கலாம்.

By Saravana Rajan

ஜிஎஸ்டி வரியின் அடிப்படையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விலை குறைப்பு விபரங்களை வேரியண்ட் வாரியாக இங்கே கொடுத்துள்ளோம்.

ஹூண்டாய் க்ரெட்டா விலை கணிசமாக குறைந்தது- முழு விபரம்!

ஜிஎஸ்டி வரியின் அடிப்படையில் க்ரெட்டா எஸ்யூவியின் விலை 5.9 சதவீதம் குறைத்துள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம். அதன்படி, ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஜிஎஸ்டி.,க்கு முந்தைய விலை, பிந்தைய விலை மற்றும் விலை வித்தியாசத்தை வேரியண்ட் வாரியாக பார்க்கலாம்.

Recommended Video

New Mercedes E-Class Edition E India Launch, Specs, Features - DriveSpark
ஹூண்டாய் க்ரெட்டா விலை கணிசமாக குறைந்தது- முழு விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் விலை விபரத்தை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

க்ரெட்டா வேரியண்ட்டுகள் ஜிஎஸ்டி.,க்கு முன் ஜிஎஸ்டி.,க்கு பின் விலை வித்தியாசம்
1.6லி பெட்ரோல் மேனுவல் - இ ரூ. 9,28,547 ரூ.8,92,242 ரூ.36,305
1.6லி பெட்ரோல் மேனுவல் இ ப்ளஸ் ரூ.9,99,900 ரூ.9,59,000 ரூ. 40,900
1.6லி பெட்ரோல் மேனுவல் எஸ்எக்ஸ் ரூ. 11,97,393 ரூ.11,51,214 Rs 46,179
1.6லி பெட்ரோல் மேனுவல் எஸ்எக்ஸ் ப்ளஸ் ரூ.12,35,441 ரூ.11,87,151 ரூ.48,290
1.6லி பெட்ரோல் ஆட்டோமேட்டிக் எஸ்எக்ஸ் ப்ளஸ் ரூ.12,99,914 ரூ.12,48,485 ரூ.51,429
ஹூண்டாய் க்ரெட்டா விலை கணிசமாக குறைந்தது- முழு விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் விலை விபரத்தை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

க்ரெட்டா வேரியண்ட்டுகள் ஜிஎஸ்டி.,க்கு முன் ஜிஎஸ்டி.,க்கு பின் விலை வித்தியாசம்
1.4லி டீசல் மேனுவல் இ ப்ளஸ் ரூ.9,99,900 ரூ.9,79,000 ரூ.20,900
1.4லி டீசல் மேனுவல் எஸ் ரூ. 11,33,808 ரூ.11,09,482 ரூ.24,326
1.4லி டீசல் மேனுவல் எஸ் ப்ளஸ் ரூ.12,24,488 ரூ.11,98,417 ரூ.26,071
ஹூண்டாய் க்ரெட்டா விலை கணிசமாக குறைந்தது- முழு விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் விலை விபரத்தை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

க்ரெட்டா வேரியண்ட்டுகள் ஜிஎஸ்டி.,க்கு முன் ஜிஎஸ்டி.,க்கு பின் விலை வித்தியாசம்
1.6லி டீசல் ஆட்டோமேட்டிக் எஸ் ப்ளஸ் ரூ.13,70,288 ரூ.13,12,681 ரூ.57,607
1.6லி டீசல் எக்ஸ்எக்ஸ் Rs 1,250,337 Rs 1,196,838 Rs 53,499
1.6லி டீசல் மேனுவல் எக்ஸ்எக்ஸ் ப்ளஸ் ரூ.13,50,245 ரூ.12,92,211 ரூ.58,034
1.6லி டீசல் மேனுவல் எஸ்எக்ஸ் ப்ளஸ் ரூ.13,88,291 ரூ.13,28,147 ரூ.60,144
1.6லி டீசல் மேனுவல் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ரூ.14,56,615 ரூ.13,93,580 ரூ.63,035
1.6லி டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்எக்ஸ் ப்ளஸ் ரூ.14,63,685 ரூ.14,00,015 ரூ.63,670
ஹூண்டாய் க்ரெட்டா விலை கணிசமாக குறைந்தது- முழு விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் 14 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எஸ்எக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக ரூ.63,670 என்ற விலை குறைப்பை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா விலை கணிசமாக குறைந்தது- முழு விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 121 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 126 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா விலை கணிசமாக குறைந்தது- முழு விபரம்!

டிசைன், வசதிகளில் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு இந்த விலை குறைப்பு நிச்சயம் கூடுதல் வாடிக்கையாளர்களை பெற்று தரும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. மேலும், தாங்கள் நிர்ணயித்த பட்ஜெட்டில் அதிக வசதிகள் நிரம்பிய மாடல்களை தேர்வு செய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Motor India Ltd. (HMIL) has announced the prices of its Creta SUV after Goods and Service Tax (GST). The South Korean carmaker has passed on the benefits of GST to customers by reducing prices of its vehicles by 5.9 percent.
Story first published: Thursday, July 13, 2017, 12:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X