மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹூண்டாய் க்ரெட்டா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹுன்டாய் க்ரெட்டா கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.அதன் மைலேஜ், விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்டவைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Arun

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் தென்கொரியாவைச் சேர்ந்த ஹுன்டாய் கடந்த தனது கிராஸ் ஓவர் எஸ்யூவியான க்ரெட்டாவை கடந்த 2015ல் அறிமுகப்படுத்தியது. தற்போது கவர்ச்சிகரமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட புதிய 2017 க்ரெட்டா காரை அறிமுகப்படுத்தியுள்ளது ஹூண்டாய்.

புதிய 2017 ஹுன்டாய் க்ரெட்டா கார் அறிமுகம்!

க்ரெட்டா கார் அறிமுகப்பட்டதிலிருந்தே அந்நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் மாடலாக க்ரெட்டா இருந்து வருகிறது. ஃப்ளூய்டிக் ஸ்கல்ப்சர் 2.0 என்ற டிசைன் கான்செப்ட் அடிப்படையில் க்டெட்டா வடிவமைக்கப்பட்டதாகும். வெர்னா மற்றும் எலாண்ட்ரா கார்களும் இதே டிசைன் வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய 2017 ஹுன்டாய் க்ரெட்டா கார் அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட க்ரெட்டா கார் இயந்திரவியல் மாற்றங்கள் இல்லாமல் டிசைனிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகளுடன் கூடிய முகப்பௌ விளக்கு, 17 இஞ்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் எல்ஈடி பின்புற விளக்குகள் உள்ளன.

புதிய 2017 ஹுன்டாய் க்ரெட்டா கார் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 1.4 லிட்டர் இஞ்சின் கொண்ட ‘ஈ+' என்ற புதிய டீசல் வேரியண்டில் கிடைக்கிறது. மற்றும் 1.6 லிட்டர் இஞ்சின் கொண்ட ‘எஸ்எக்ஸ்+ டூயல் டோன்' வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது.

புதிய 2017 ஹுன்டாய் க்ரெட்டா கார் அறிமுகம்!

கடந்த ஆண்டு க்ரெட்டா கார் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் விதமாக வெளியிடப்பட்ட ஸ்பெஷல் எடிஷனில் க்ரெட்டா கார், டூயல் டோன் பெயிண்டிங்கில் வெளிவந்தது. தற்போது இதே டூயல் டோனில் புதிய மேம்படுத்தப்பட்ட க்ரெட்டா அறிமுகமாகியுள்ளது.

புதிய 2017 ஹுன்டாய் க்ரெட்டா கார் அறிமுகம்!

வெள்ளை & கருப்பு மற்றும் கருப்பு & சிவப்பு ஆகிய இரண்டு டூயல் டோன் வண்ணங்களில் க்ரெட்டா கிடைக்கிறது. எஸ்எக்ஸ்+ டூயல் டோன் வேரியண்டில் ரூஃப் டாப் பியானோ பிளாக் பினிஷ் செய்யப்பட்டு, கருப்பு வண்ண ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. இது இக்காருக்கு ஸ்போர்ட்ஸ் லுக்கை அளிக்கிறது.

புதிய 2017 ஹுன்டாய் க்ரெட்டா கார் அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட புதிய க்ரெட்டாவில் முக்கிய அம்சமாக இருப்பது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும் புதிய 7.0 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். இதில் மிர்ரர் லிங்க் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

புதிய 2017 ஹுன்டாய் க்ரெட்டா கார் அறிமுகம்!

மேலும் இதில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரண்டு ஏர்பேக்குகள் ஆகியவை ஸ்டேண்டர்ட் அம்சங்களாக கிடைக்கிறது. இதன் டேஷ்போர்ட் கருப்பு வண்ணத்திலும், சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் டூயல் டோன் லெதர் சீட்களும் தரப்பட்டுள்ளது. இது உட்புறத்திற்கு கவர்ச்சிகர தோற்றத்தை அளிக்கிறது.

இஞ்சின்

இஞ்சின்

மேம்படுத்தப்பட்ட 2017 கிரெட்டா கார் 3 இஞ்சின்களில் கிடைக்கிறது.

  • 1.6 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் இஞ்சின் - அது அதிகபட்சமாக 128 பிஎஸ் ஆற்றலை வழங்குகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் ஆற்றலை வழங்குகிறது.
  • 1.6 லிட்டர் டூயல் விடிவிடி பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎஸ் ஆற்றலை வழங்குகிறது.இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • விலைப்பட்டியல்

    விலைப்பட்டியல்

    புதிய க்ரெட்டா காரின் விலை வேரியண்ட் வாரியாக கீழே உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    • ஈ - ரூ.9,28,547
    • ஈ+ - ரூ.9,99,900
    • ஈ+ (1.4 லிட்டர் டீசல்) - ரூ.9,99,900
    • எஸ் (1.4 லிட்டர் டீசல்) - ரூ.11,33,808
    • எஸ்+- (1.4 லிட்டர் டீசல்) - ரூ.12,24,488
    • எஸ் + ஏடி (1.6 லிட்டர் டீசல்) - ரூ.13,70,288
    • எஸ் எக்ஸ் (1.6 லிட்டர் டீசல்) - ரூ.12,50,337
    • எஸ் எக்ஸ் + - ரூ.11,97,393
    • எஸ் எக்ஸ் +(1.6 லிட்டர் டீசல்) - ரூ.13,50,245
    • எஸ் எக்ஸ் + எஸ்ஈ (1.6 லிட்டர் டீசல்) - ரூ.13,88,291
    • எஸ் எக்ஸ்+ ஏடி - ரூ.12,99,914
    • எஸ் எக்ஸ்+ ஏடி( 1.6 லிட்டர் டீசல்) - ரூ.14,56,615
    • (அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

      மைலேஜ்

      மைலேஜ்

      • ஹுன்டாய் க்ரெட்டாவின் மேனுவல் கியர் கொண்ட பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 15.29 கிமீ மைலேஜ் தருகிறது.
      • மேனுவல் கியர் கொண்ட டீசல் வேரியண்ட் லிட்டருக்கு 21.38 கிமீ மைலேஜ் தருகிறது.
      • ஆட்டோமேடிக் கியர் கொண்ட டீசல் வேரியண்ட் லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜ் தருகிறது.
      • மேனுவல் கியர் கொண்ட பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 15.29 கிமீ மைலேஜ் தருகிறது.
      • ஆட்டோமேடிக் கியர் கொண்ட பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 15.29 கிமீ மைலேஜ் தருகிறது.
Most Read Articles
English summary
Read in tamil about hyundai introduces new 2017 creta for sales in india. know about mileage, price specifications and more
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X