புதுப்பொலிவுடன் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் அறிமுகம்... !!

புதுப்பொலிவுடன் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Written By:

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் இந்தியாவில் சத்தமில்லாமல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட இந்த புதிய மாடலின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுடன், புதிய டீசல் எஞ்சினும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் முகப்பு க்ரில் அமைப்பு பெரிதாக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகளும் டாப் வேரிண்யண்ட்டில் இடம்பெற்று இருக்கிறது. முன்புற மற்றும் பின்புற பம்பர் டிசைன் மாற்றம் கண்டுள்ளது. புதிய கிராண்ட் ஐ10 காரில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் கவர்ச்சி தரும் விஷயம்.

இன்டீரியரில் டிசைன் மாற்றங்கள் இல்லை. புதிய கிராண்ட் ஐ10 காரின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் 7 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் வசதிகளுடன் கிடைக்கும்.

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் திரையானது ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவையும் சப்போர்ட் செய்யும். இதுதவிர்த்து, பின்புற இருக்கைக்கான தனி ஏசி வென்ட்டுகளும் உண்டு. ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் 14 அங்குல அலாய் வீல்கள், இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இந்த காரின் மதிப்பு உயர்ந்துள்ளது.

பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎஸ் பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் மிக முக்கிய அம்சம், பழைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக தற்போது புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎஸ் பவரை அளிக்க வல்லதாகவும், மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும் இருக்கிறது. புதிய கிராண்ட் ஐ10 காரின் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் தற்போது யூரோ-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் வருகிறது. இந்த காருக்கு 2 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டும் கிடைக்கும். பழைய மாடலைவிட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விலை ரூ.30,000 வரை குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வேரியண்ட் வாரியாக விலை விபரங்கள் கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

 • எரா [மேனுவல்] : ரூ.4.58 லட்சம்
 • மேக்னா [மேனுவல்] : ரூ.5.23 லட்சம்
 • மேக்னா [ஆட்டோமேட்டிக்] : ரூ.5.99 லட்சம்
 • ஸ்போர்ட்ஸ் [மேனுவல்] : ரூ.5.66 லட்சம்
 • ஸ்போர்ட்ஸ் ஆப்ஷன் [மேனுவல்]:ரூ.5.96 லட்சம்
 • ஸ்போர்ட்ஸ் [ஆட்டோமேட்டிக்] : ரூ.6.83 லட்சம்
 • அஸ்ட்டா [மேனுவல்] : ரூ.6.40 லட்சம்

 

டீசல் மாடல் விலை விபரம்

 • எரா [மேனுவல்] : ரூ.5.68 லட்சம்
 • மேக்னா [மேனுவல்] : ரூ.6.16 லட்சம்
 • ஸ்போர்ட்ஸ் [மேனுவல்] : ரூ6.59 லட்சம்
 • ஸ்போர்ட்ஸ் ஆப்ஷன் [மேனுவல்]:ரூ.6.90 லட்சம்
 • அஸ்ட்டா [மேனுவல்] : ரூ.7.33 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Monday, January 30, 2017, 10:19 [IST]
English summary
Hyundai Grand i10 Facelift Launched In India.
Please Wait while comments are loading...

Latest Photos