Just In
- 28 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் விற்பனைக்கு அறிமுகம்
ஹூண்டாய் நிறுவனம் புதிய இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தனது ஹேட்ச்பேக் மாடலான புதிய இயான் காரில் புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஸ்போர்ட்டி வடிவமைப்பிலும், கூடுதல் வசதிகளுடன் இக்காரை அறிமுகப்படுத்தி உள்ளது ஹூண்டாய் நிறுவனம்.
கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாத மத்தியில் இயான் ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில், அசத்தலான புளூயிடிக் வடிவமைப்பில் வந்த இயான், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது வரையிலும் நடுத்தர கார்கள் வரிசையில் முக்கிய இடத்தை இயான் பிடித்துள்ளது.
புதிய பாடி மோல்டிங் கிராஃபிக்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் போன் கனெக்ட் வசதியுடன் கூடிய 6.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார் அறிமுகமாகியுள்ளது.
மேலும் கதவின் பேனல்களில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்ட மியூசிக் சிஸ்டம் இதில் தரப்பட்டுள்ளது. ஸ்டீரிங் வீலில் கண்ட்ரோல் பட்டன்கள் பொருத்தப்படாதது குறையாக உள்ளது. மற்றபடி இதன் இண்டீரியர்களில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் வெளிவந்துள்ளது ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார்.
புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 0.8 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஹச்பி ஆற்றலையும், 75 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. என்சினின் ஆற்றலை 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பின்சக்கரங்களுக்கு அளிக்கிறது.
ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் எரா பிளஸ் மற்றும் மேக்னா பிளஸ் என்ற இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது.
ஹுண்டாய் இயான் எரா பிளஸ் ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரின் சாலிட் கலர் மாடல் ரூ. 3.88 லட்சம் என்ற விலையிலும், மெட்டாலிக் பெயிண்ட் மாடல் ரூ. 3.92 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது.
இதே போல ஹுண்டாய் இயான் மேக்னா பிளஸ் வேரியண்டின் சாலிட் கலர் மாடல் ரூ. 4.14 லட்சம் என்ற விலையிலும், மெட்டாலிக் பெயிண்ட் மாடல் ரூ. 4.18 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது.
(விலை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம்விலை அடிப்படையில் தரப்பட்டுள்ளது.)
புதிய ஹூண்டாய் இயான் ஸ்போர்ட்ஸ் எடிசன் கார் போலார் ஒயிட் கலரில் மட்டும் கிடைக்கிறது. வழக்கமான இயான் கார் ஸ்லீக் சில்வர், பிரிஸ்டின் பிளூ ,அற்றும் ரெட் பாஷன் உள்ளிட்ட 3 வண்ணங்களில் கிடைக்கிறது.
ஸ்போர்ட்ஸ் எடிஷன் இயான் கார் ரெனால்ட் க்விட் மற்றும் மாருதிசுசுகி ஆல்டோ 800 கார்களுக்கு போட்டியாக களமிறக்கியுள்ளது ஹூண்டாய். லிட்டருக்கு 18 - 20 கிமீ மைலேஜ் தருகிறது இயான்.