புதிய ஹூண்டாய் எஸ்யூவி வருகை குறித்த தகவல்கள்!

Written By:

எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் மிக பலமாக உள்ளது. இதனால், பல வகைகளில் எஸ்யூவி மாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு போட்டியாக புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை களமிறக்க உள்ளது ஹூண்டாய்.

க்யூஎக்ஸ்ஐ என்ற குறியீட்டுப் பெயரில் இப்போது அழைக்கப்பட்டு வரும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி கார் கோனா என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த புதிய எஸ்யூவி மாடல் கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எச்என்டி-14 கார்லினோ என்ற கான்செப்ட் மாடலின் அடிப்படையிலான மாடலாக வடிவமைக்கபப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் காரின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் மோனோகாக் உடற்கூடு அடிப்படையில், இந்த புதிய ஹூண்டாய் கோனா எஸ்யூவியும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய ஹூண்டாய் கோனா எஸ்யூவியில் 118 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து, ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் தேர்வாக வழங்கப்படும். நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவமும், வசதிகளையும் கொண்டு வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பதுடன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கும் இது போட்டியாக இருக்கும்.

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
At the Auto Expo 2016, Hyundai showcased HND-14 Carlino concept and the Kona will be based on the same concept.
Please Wait while comments are loading...

Latest Photos