புதிய 2017 ஹூண்டாய் எக்ஸெண்ட் கார் அறிமுகம் - விலை, மைலேஜ் உள்ளிட்ட முழு தகவல்கள்..!

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹூண்டாய் எக்ஸெண்ட் கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 2017 எக்ஸெண்ட் காம்பாக்ட் செடன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

புதிய 2017 ஹூண்டாய் எக்ஸெண்ட் காரில் 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஷார்க்ஃபின் ஆண்டனா உள்ளிட்ட செக்மெண்டிலேயே முதலாவதாக பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஃபுளூய்டிக் டிசைன்

ஃபுளூய்டிக் டிசைன்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஃபுளூய்டிக் டிசைன் வடிவத்தில் இந்த புதிய கார் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் பல புதிய மாறுதல்களை இந்த கார் பெற்றள்ளது. புதிதாக ஒரு டீசல் இஞ்சினிலும் இக்கார் கிடைக்கிறது.

காஸ்கேட் டிசைன் கிரில்

காஸ்கேட் டிசைன் கிரில்

புதிய எக்ஸெண்ட் காரில் முன்பிருந்த ஹனிகோம்ப் வடிவ கிரில் அமைப்புக்கு பதிலாக கவர்ச்சிகரமான ஹெக்ஸாகனல் வடிவ காஸ்கேட் டிசைன் கிரில் கொடிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

முன்பு இருந்த ஃபாக் லைட்டுகளுக்கு பதிலாக பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்(ஓ) வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

காரின் பின்புற வடிவமைப்பு முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது. ரீடிசைன் செய்யப்பட்ட ஸ்லீக் ரெஃப்லக்டர்களுடன் கூடிய டூயல் டோன் ரியர் பம்பர் பின்புற கவர்ச்சியை மேலும் கூட்டுகிறது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

ஸ்டைலிஷ்ஷான ஷார்க் ஃபின் ஆண்டனா, கிரோம் டோர் ஹேண்டில்கள், ஏரோடைனமிக் வடிவத்திலான இண்டிகேட்டர்களுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் அளிக்கப்பட்டுள்ளது. 15 இஞ்ச் அலாய் வீல்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

இதன் உட்புறம் அதிக இடவசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய லெதர் சீட் வேலைபாடுகளால் உட்புறம் மிகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

லெதர் உறையுடன் கூடிய ஸ்டீரிங் வீல், கப் ஹோல்டருடன் கூடிய ரியர் சீட் ஆர்ம் ரெஸ்ட், ஸ்மார்ட் கீயுடன் கூடிய புஷ் பட்டன் ஸ்டார்ட் சிஸ்டம், டிரைவர் சீட் அட்ஜஸ்மெண்ட் என பல புதிய அம்சங்களால் இந்த கார் நிறைந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

முழுமையான தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு ஏசி, ரியர் ஏசி வெண்டுகள், குளிரூட்டப்பட்ட கிளவ் பாக்ஸ் மற்றும் மூடு பனி நீக்கும் வசதிகள் உள்ளிட்டவை இதில் உள்ளது.

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்

2017 ஹூண்டாய் எக்செண்ட் காரில் புதிதாக 7.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இது பல வசதிகளை உள்ளடக்கியதாகும்.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ, மிர்ரர் லிங்க், ஸ்மார்ட்போன் நேவிகேஷன் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

மேலும் பாதுகாப்பான டிரைவிங்கை உறுதிப்படுத்த நேவிகேஷன் சப்போர்ட், வாய்ஸ் ரெகக்னைஷன் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அளிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

சார்ஜிங் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன் ஹோல்டர், ஸ்டீரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள், ரியர் பவர் அவுட்லெட், சிறந்த மைலேஜை பெற கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் இக்கார் பெற்றுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக முன்புற இரண்டு ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்ட் அம்சமாக இந்த காரில் இடம்பிடித்துள்ளது. ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஃஷனலாகவே கிடைக்கிறது.

இஞ்சின்

இஞ்சின்

மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஹூண்டாய் எக்ஸெண்ட் காரில் புதிய 1.2 லிட்டர் டீசல் இஞ்சின் இடம்பிடித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

இதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே இருந்த 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சினிலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் கிடைக்கிறது.

இஞ்சின் விவரம்

இஞ்சின் விவரம்

புதிய 1.2 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 74 பிஹச்பி ஆற்றலையும், 190 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

இஞ்சின் விவரம்

இஞ்சின் விவரம்

இதேபோல இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 82 பிஹச்பி ஆற்றலையும், 114 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் என இரண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

புதிய 2017 ஹூண்டாய் எக்ஸெண்ட் கார் பெட்ரோல், டீசல் இஞ்சின் மற்றும் அம்சங்களை பொருத்து மொத்தம் 10 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய 2017 எக்ஸெண்ட் கவர்ச்சிகரமான 5 வண்ணங்களில் கிடைக்கிறது. அவற்றை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

  • வைன் ரெட் (Vine Red)
  • போலார் ஒயிட் ( Polar White)
  • ஸ்லீக் சில்வர் (Sleek Silver)
  • ஸ்டார் டஸ்ட் (Star Dust)
  • மெரைன் பிளூ (Marine Blue)
  • விலை விபரம்

    விலை விபரம்

    மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹூண்டாய் எக்ஸெண்ட் காம்பாக்ட் செடன் ரூ. 5.38 லட்சம் முதல் ரூ. 7.63 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

    வேரியண்ட் வாரியாக இதன் விலைப்பட்டியலை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

    வேரியண்ட் வாரியாக இதன் விலைப்பட்டியலை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

    வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை (டெல்லி )
    எக்ஸெண்ட் ஈ (பெட்ரோல்) ரூ. 5.38 லட்சம்
    எக்ஸெண்ட் ஈ (டீசல்) ரூ. 6.28 லட்சம்
    எக்ஸெண்ட் ஈ+ (பெட்ரோல்) ரூ. 5.93 லட்சம்
    எக்ஸெண்ட் ஈ+ (டீசல்) ரூ. 6.83 லட்சம்
    எக்ஸெண்ட் எஸ் (பெட்ரோல்) ரூ. 6.29 லட்சம்
    எக்ஸெண்ட் எஸ் (டீசல்) ரூ. 7.19 லட்சம்
    எக்ஸெண்ட் எஸ் எக்ஸ் (பெட்ரோல்) ரூ. 6.73 லட்சம்
    எக்ஸெண்ட் எஸ் எக்ஸ் (டீசல்) ரூ. 7.63 லட்சம்
    எக்ஸெண்ட் எஸ் எக்ஸ்(ஓ) (பெட்ரோல்) ரூ. 7.51 லட்சம்
    எக்ஸெண்ட் எஸ் எக்ஸ்(ஓ) (டீசல்) ரூ. 8.41 லட்சம்
    எக்ஸெண்ட் ஏடி (பெட்ரோல்) ரூ. 7.09 லட்சம்
    மைலேஜ்

    மைலேஜ்

    புதிய ஹூண்டாய் எக்ஸெண்ட் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.14 கிமீ மைலேஜ் தருகிறது.

    மைலேஜ்

    மைலேஜ்

    இதேபோல ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல் எக்ஸெண்ட் கார் லிட்டருக்கு 17.36 கிமீ மைலேஜ் தருகிறது.

    மைலேஜ்

    மைலேஜ்

    2017 எக்ஸெண்ட் காரில் புதிதாக இடம்பிடித்துள்ள டீசல் இஞ்சின் மாடல் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தருகிறது.

    மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் 2017 எக்ஸெண்ட் கார் அறிமுகம்..!

    மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹூண்டாய் எக்ஸெண்ட் கார் மாருதிசுசுகியின் டிசைர் மற்றும் புதிய டாடா டிகோர், ஃபோக்ஸ்வேகன் ஏமியோ மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் கார்களுக்கு கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil about Hyundai launches all new 2017 xcent in india.price, mileage, specs and more
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X