ஜிஎஸ்டி வரியால் கார், மோட்டார்சைக்கிள் விலை உயரும்!

ஜிஎஸ்டி வரி விதிப்பால், கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விலை உயரும் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பை கொண்டு வரும் வகையில் வரும் ஜூலை 1 முதல், சரக்கு மற்றும் சேவை வரி [ ஜிஎஸ்டி] அமல்படுத்தப்பட உள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கார் மற்றும் மோட்டார்சைக்கிள் விலை உயரும் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான 1,200சிசி மற்றும் அதற்கும் குறைவான சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட சிறிய வகை பெட்ரோல் கார்களின் விலை ஒரு சதவீதம் உயரும். அதேபோன்று, 1.5 லிட்டர் வரையிலான டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சிறிய வகை கார்களின் விலை மூன்று சதவீதம் உயரும்.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரும்போது எஸ்யூவி ரக கார்கள், சொகுசு கார்கள், பெரிய வகை செடான் கார்களின் விலையில் அதிக மாற்றங்கள் ஏற்படாது. சில மாடல்களின் விலை சற்றே விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

சொகுசு வகை கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி தவிர்த்து 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். ஆனாலும், இரண்டையும் சேர்த்தால்கூட, தற்போது விதிக்கப்படும் வரியை விட சற்று குறையும். எனவே, பெரிய வகை கார்களின் விலை 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை குறையும். அல்லது விலையில் மாற்றம் இருக்காது.

இருசக்கர வாகன மார்க்கெட்டை பொறுத்தவரையில், 350சிசி மற்றும் அதற்கு அதிகமான திறனுடைய எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு கூடுதலாக மூன்று சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பானது 5,12, 18 மற்றும் 28 சதவீங்களில் நான்கு வகைகளில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, சிறிய வகை கார்களுக்கு 20 சதவீதம் ஜிஎஸ்டி வரி எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின்படி, அனைத்து கார்களுக்கும் 28 சதவீத வரி விதிப்பு முறையின் கீழ் வருகிறது. இதனால், சிறிய கார்களின் விலை ஒரு சதவீதம் முதல் மூன்று சதவீதம் வரை உயரும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் சிறிய கார் விற்பனைதான் மிக அதிகம். கார் மார்க்கெட்டின் அடித்தளமாக கருதப்படும் சிறிய கார் மார்க்கெட்டிற்கு ஜிஎஸ்டி வரியால் எந்த பலனும் இல்லை. இது வாடிக்கையாளர்களுக்கும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது.

மேலும், சிறிய கார்களின் விற்பனையில் சிறிய பாதிப்பு ஏற்படும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், சொகுசு கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியும், 15 சதவீதம் கூடுதல் வரியும் சேர்த்தாலும் தற்போது விதிக்கப்படும் வரி அளவை ஒட்டி வருவதால் அதிக மாற்றங்கள் இருக்காது. சில சொகுசு கார்களின் விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
All You Need To Know About The Impact Of GST On The Automobile Industry
Please Wait while comments are loading...

Latest Photos