வாகன பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மின்சார சாலை: புதிய தொழில்நுட்பம்

Written By:

பெட்ரோல், டீசலை தொடர்ந்து வாகனங்களுக்கு மின்சாரத்தை ஆற்றலாக உருவாக்க இந்தியா உட்பட சீனா, தென் கொரியா என பல நாடுகள் முயன்று வருகிறது.

மின்சார கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை விட அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது தான் தற்போதைய நேரத்தில் சவாலான காரியம்.

மின்சார கார் உற்பத்தியில் இறங்குவதாக சமீபத்தில் அறிவித்த இஸ்ரேல் அரசு, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க அந்நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் கைக்கோர்த்துள்ளது.

இந்த கூட்டணியின் மூலம் மின்சார வாகனங்கள் பயணத்தின் போதே சாலை மூலம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் தொழில்நுட்பத்தை, இஸ்ரேல் அரசு அந்நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கவுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், சாலையில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் முறையை முதலில் மின்சார பேருந்துகளை வைத்து சோதனை செய்து பார்க்கவுள்ளதாகவும் இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.

'எலெக்ட்ரோ ரோடு' என்ற பெயரில் இதற்கான திட்டப் பணிகளை தொடங்கியுள்ள அந்நாட்டின் சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம், சுமார் 12 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

முதலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்
மின்சார சாலைக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து திட்டப் பணிகள் மேலும் விரிவுப்படுத்தப்படும்.

இதன்படி இஸ்ரேல் அரசு, சோதனை முடிந்த பிறகு நாட்டின் முதல் 'எலெக்ட்ரோ ரோடு' பயன்பாட்டை 11 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தனது எலியாட் நகரத்திலிருந்து ரமோன் விமான நிலையம் வரை கட்டமைக்கவுள்ளது.

தாமிரப் பட்டைகள் மற்றும் மின்சார காந்தங்களால் இஸ்ரேலின் 'எலெக்ட்ரோ ரோடு' திட்டம் உருவாக்கப்படவுள்ளது. சாலைகளில் பதிக்கப்படும் இவற்றின் மேல் மின்சார வாகனங்கள் செல்லும் போது, அதனுடைய பேட்டரிகள் தானாக சார்ஜ் செய்துகொள்ளும்.

இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நகரங்களுக்கு இத்திடத்தை உருவாக்கி தர 'எலெக்ட்ரோ ரோடு' திட்டத்தின் தலைமை அதிகாரி ஓரன் எஸ்ஸர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் இத்திட்டம் வெற்றி அடைந்தால், எலெக்ட்ரோ ரோடு கட்டமைப்பை மற்ற நாடுகளும் நிச்சயம் மேற்கொள்ளும்.

Story first published: Thursday, May 18, 2017, 15:46 [IST]
English summary
Israel introduces New Road Technology for Charging th Electric Vechicles. Clck for further...
Please Wait while comments are loading...

Latest Photos