எண்டேவர், பார்ச்சூனர் கார்களுக்கு போட்டியாக புதிய இசுசூ எம்யூ-எக்ஸ் எஸ்யூவி கார் அறிமுகம்..!

இசுசூமோட்டார்ஸ் நிறுவனம் புதிய எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Written By:

இஞ்சின் தயாரிப்புக்கு உலகப் புகழ் பெற்ற இசுசூநிறுவனம் 2012ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்படத்துவங்கியது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.

சென்னைக்கு அருகே கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி பகுதியில் இந்நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.

தற்போது இந்நிறுவனம் 7 சீட்கள் கொண்ட எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்ரீசிட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய இசுசூஎம்யூ-எக்ஸ் எஸ்யூவி 4*2 மற்றும் 4*4 என இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் ஆகியுள்ளது. இவை டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக் அப் டிரக்கின் டிசைனை தழுவி அறிமுகமாகியுள்ளது.

 

 

டொயோட்டாவின் ஃபார்ச்சூனரைப் போல் எம்யு-எக்ஸ் கார் பெரிய எஸ்யூவி ரகத்திலானது. இது ஒரு முழுமையான எஸ்யூவி ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வி-கிராஸ் பிக் அப் டிரக்கின் முகப்பை தழுவி இருக்கும் எம்யு-எக்ஸ் எஸ்யூவியில் அகலமான பம்பர்கள் மற்றும் 3வது வரிசை சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் செவர்லேயின் டிரையல்பிளேசர் காரிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது

இதில் 17 இஞ்ச் அலாய் வீல்கள், பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகள், ரூஃப் ரெயில்கள், டபுள் ஸ்லேட் கிரோம் கிரில், வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை உள்ளன.

புதிய இசுசூஎம்யு-எக்ஸ் காரில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜூடு டீசல் இஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 177 பிஹச்பி ஆற்றலையும், 380 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

எம்யு-எக்ஸ் காரின் 4*4 வேரியண்டில் ஷிஃப்ட்-ஆன்-பிளை-ஆப்பரேஷன் என்ற அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இஞ்சினின் ஆற்றலை வீல்களுக்கு பகிர்ந்து அளிப்பதை கட்டுப்படுத்த இயலும்.

ஷிஃப்ட்-ஆன்-பிளை-ஆப்பரேஷன் மூலம் இரண்டு-ஹை, நான்கு-ஹை மற்றும் நான்கு-லோ என்ற மோடுகளில் வீல்களை கட்டுப்படுத்த இயலும்.

இங்கு இரண்டு என்பது இரண்டு பின்சக்கரங்களையும், நான்கு என்பது காரின் நான்கு சக்கரங்களையும் குறிக்கிறது.

எம்யு-எக்ஸ் காரில் அப்-ஹில் மற்றும் டவுன் ஹில் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இது மலையேற்றத்திற்கான காரை கட்டுப்படுத்தும் அம்சமாகும்.

புதிய எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காரில் டச் ஸ்கிரீன் கொண்ட 7 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இது பிளூடூத் கனெக்டிவிட்டியையும் சப்போர்ட் செய்கிறது.

மேலும் புதிய எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காரில் 10 இஞ்ச் மானிட்டர் அதன் ரூஃபில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் கிரூஸ் கண்ட்ரோல் வசதியுகளும் உள்ளது.

இசுசூஎம்யூ-எக்ஸ் காரில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது. அவை கீழ்கண்டவாறு..

  • டூயல் ஃபிரண்ட் ஏர்பேக்குகள்
  • எலக்ட்ரானிக் கண்ட்ரோல்டு ஏபிஎஸ் பிரேக்கிங் 
  • எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
  • டிராக்‌ஷன் கண்ட்ரோல்
  • ரியர் பார்க்கிங் கேமரா

புதிய இசுசூஎம்யூ-எக்ஸ் கார் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

  • சில்கி ஒயிட் (Silky White)
  • ஆர்கிட் பிரவுண் ( Orchid Brown)
  • காஸ்மிக் பிளாக் (Cosmic Black)
  • டைரேனியம் சில்வர் (Titanium Silver)

விலை விபரம்

இசுசூஎம்யூ-எக்ஸ் எஸ்யூவி காரின் 4*2 வேரியண்ட் ரூ.23.99 லட்சத்திற்கும், 4*4 வேரியண்ட் ரூ.25.99 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கிறது. (இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் அடிப்படையில்)

எம்யு-எக்ஸ் காரின் 4*2 வேரியண்ட் லிட்டருக்கு 13.8 கிமீ மைலேஜ் தரும் என்று இசுசூநிறுவனம் கூறுகிறது.

புதிதாக அறிமுகமாகியுள்ள இசுசூஎம்யூ-எக்ஸ் கார் ஃபோர்டு எண்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மிட்சுஃபிஷி பஜிரோ ஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக விளங்கும்.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in tamil about Isuzu mu-x launched in india. price, mileage, colors, specs and more
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK