ஆடி க்யூ 3-யை குறிவைத்து காய் நகர்த்தும் ஜாகுவார்... கின்னஸ் சாதனை படைத்த இ-ஃபேஸ் காரை வெளியிட்டது!

Written By:

ஜாகுவார் நிறுவனம் தனது புதிய இ-ஃபேஸ் எஸ்.யூ.வி காரை உலக சாதனைக்கு உட்படுத்தி அதற்கு பிறகு அறிமுகப்பட்டுத்தியுள்ளது.

டேரி கிராண்ட் என்ற ஸ்டண்ட் கலைஞர், ஜாகுவார் இ-ஃபேஸ் காரில் 270 டிகிரியில் பேரல் வட்டமாக 15.3 மீட்டரில் சுற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஆடியின் க்யூ 3 காருக்கு போட்டியாக ஜாகுவார் வெளியிடும் மாடல் தான் இ-ஃபேஸ் கார். மேலும் அந்நிறுவனம் உலகளவில் எஸ்.யூ.வி காருக்கான விற்பனையிலும் முன்னிலை பெற ஆய்த்தமாகி உள்ளது.

ஜாகுவார் முன்னர் வெளியிட்ட எஃப்-ஃபேஸ் காரை விட சிறயளவில் இந்த கார் விரைவில் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் 2018ம் ஆண்டில் இதனுடைய விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய ஒன்றிய நாடுகளை விட்டு, வேறு ஒரு நாட்டில் தயாரிக்கப்படவுள்ள முதல் ஜாகுவார் கார் என்ற பெருமையும் இ-ஃபேஸ் மாடல் பெற்றுள்ளது.

எக்ஸ்-டைப் மாடலுக்கு பிறகு முன்பக்க டிரைவிங் முறையை பெற்ற முதல் மாடலாகவும் ஜாகுவார் இ-ஃபேஸ் கார் உள்ளது.

இந்த காரில் நடத்தப்பட்ட ஸ்டண்டுகளை குறித்து தான் தற்போது ஆட்டோமொபைல் உலகமே பெரிய செய்தியாக பேசி வருகிறது.

லண்டனில் உள்ள எக்ஸைல் சென்டரில் நடைபெற்ற இந்த ஸ்டண்ட் நிகழ்ச்சியில் ஜாகுவார் இ-ஃபேஸ் எஸ்.யூ.வி கார் 15.3 மீண்ட உயரத்தில் பறந்து, 160 மீட்டர் தொலைவை சுழன்று சென்று அடைந்தது.

கின்னஸ் உலக சாதனைக்கான நடத்தப்பட்ட இந்த ஸ்டண்ட் நிகழ்ச்சியில், அதற்கான அதிகாரிகளும் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியான ’தி மேன் வித் கோல்டன் கன்’ என்ற படத்தின் வரக்கூடிய பேரல் ரோல் என்ற ஸ்டண்ட் காட்சியின் தாக்கத்தால் ஜாகுவார் இ-ஃபேஸ் காரின் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

முழுவதுமாக தயாரிப்பு நிலையை அடைந்த இ-ஃபேஸ் காரைக்கொண்டு தான் இந்த ஸ்டண்ட் காட்சி நடத்தப்பட்டதாக ஜாகுவார் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாறான ஒரு ஸ்டண்டை அரங்கேற்ற ஜாகுவாருக்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. இந்த இ-ஃபேஸ் கார் பார்க்க எஃப்-ஃபேஸ் கார் போன்று உள்ளதால், அதை வாடிக்கையாளர்கள் தவறாக சாதரணமாக எடுத்துக்கொள்வார்களோ என ஜாகுவார் எண்ணுகிறது.

அந்த எண்ணம் வராமல் இருக்கவே இப்படி ஒரு ஸ்டண்ட் நிகழ்வை நடத்தி காரின் மீது ஒரு தனித்துவத்தை ஜாகுவார் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் என்ன செய்தாலும் இ-ஃபேஸ் கார் பார்க்க எஃப்-ஃபேஸ் கார் போன்று தான் உள்ளது.

ஆனால் எஃப்-ஃபேஸ் மாடலுடன் ஒப்பிடும் போது, இந்த இ-எஃபேஸ் காரின் முன்பக்க கிரில் மேலும் கம்பீரமாக உள்ளது.

காரின் முகப்பு விளக்குகள், எல்.இ.டி விளக்குகள் என அனைத்தும் எஃப்-ஃபேஸ் தோற்றத்தை நினைவுக்கு கொண்டு வருகின்றன.

ஆடி க்யூ 3 காருக்கு போட்டியாக கால்பதிக்கும் ஜாகுவார் இ-ஃபேஸ் கார் அளவிலும் க்யூ 3-யின் 4.4 மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது.

ஆனால் க்யூ 3 மாடலை விட இந்த காரின் மேற்கூரை அமைப்பு சற்று சிறியதாக இருப்பது போல் தெரிகிறது.

மேம்படுத்தப்பட்ட இந்த காரின் டாஷ்போர்டில், 12.3 அங்குலம் டிஎஃப்டி டிஜிட்டல் பேனலுடன், ஹெட்-அப் டிஸ்பிளே உள்ளது. அனைத்து கார்களிலும் பின்பற்றக்கூடிய ஒரே அளவிலான 10.2 அங்குல அளவில் இதனுடைய தொடுதிரை உடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

இருந்தாலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ தேவைகள் காரின் இன்ஃபோடெய்மெண்ட் சிஸ்டத்தில் இயங்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை அது இல்லை என்றாலும், வருங்காலத்தில் விற்பனையின் போது அவை இணைக்கப்படலாம்.

நல்ல இடவசதியை பெற்ற கேபினில், 5 யுஎஸ்பி சார்ஜ் பாயின்ட் உள்ளது. மேலும் எட்டு மொபைல்களை ஒரே நேரத்தில் இணைத்துக்கொள்ளக்கூடிய 4ஜி வைஃபை ஹாட்ஸ்பாட் வசதியும் ஜாகுவார் இ-ஃபேஸ் காரில் உள்ளது.

2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த காரில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கூட்டணியின் மூலம் அதிகபட்சமாக 148 பிஎச்பி முதல் 178 பிஎச்பி பவர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலிலேயே டீசலில் தயாராகும் எஞ்சின் 237 பிஎச்பி பவர் தரும் திறனில் தயாரிக்கப்படுகிறது. மேலும் பெட்ரோலிலேயே ட்ர்போ தரத்தில் மேலும் இரண்டு மாடல் கார்கள் தயாரிக்கப்படும்.

ஜாகுவார் வெளியிட்டுள்ள புதிய ஈ-ஃபேஸ் கார் நிச்சயம் செயல்திறன் மிக்க ஒரு வாகனம் தான். இருந்தாலும் அது எஃப்-ஃபேஸ் எஸ்.யூ.வி-யை பின்பற்றி உருவாக்கப்பட்டது தான்.

ஜாகுவாரே நினைத்தாலும் முற்றிலுமாக இந்த கருத்தை மறுக்க முடியாது. ஆடி க்யூ 3 காரை வாங்க விரும்புபவர்களுக்கு இ-ஃபேஸ் மற்றொரு நிகரான வாய்ப்பாக இருக்கும்.

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Read in Tamil: Jaguar unveiled its new E-Pace SUV with a stunning world record. Cilck for Details...
Story first published: Friday, July 14, 2017, 16:02 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos