இந்த ஆண்டின் உலகின் மிக சிறந்த காராக ஜாகுவார் எஃப் - பேஸ் எஸ்யூவி தேர்வு!

2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த காராக ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி, நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிவிக்கப்பட்டது. இது தவிர மற்ற பிரிவுகளிலும் வெற்றி பெற்ற கார்கள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

Written By:

13 ஆண்டுகால நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் உலகளவில் சிறந்த கார் பிரிவில் முதன்முறையாக எஸ்.யூ.வி மாடல் ஒன்று வெற்றி பெற்றுள்ளது. ஜாகுவார் எஃப்-ஃபேஸ் எஸ்.யூ.வி கார் மாடல் 2017ம் ஆண்டின் சிறந்த கார் என கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது, மேலும் சிறந்த வடிவமைப்பை பெற்ற கார் என்ற பிரிவிலும் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் எஸ்.யூ.வி கார் வெற்றி வாகை சூடியுள்ளது.

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 23 நாடுகளை சேர்ந்த 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக சோதனை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் வெற்றி பெற்றுள்ள கார்களின் பட்டியல்

உலகின் சிறந்த கார் 2017

2017ம் ஆண்டிற்கான சிறந்த கார் என்ற பிரிவில் ஜாகுவார் நிறுவனத்தின் எஃப்- ஃபேஸ் எஸ்.யூ.வி கார் நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிவிக்கப்பட்டது. இதே பிரிவில் தன்னுடன் சரிநிகர் போட்டியாக இருந்த ஆடி க்யூ5, வோக்ஸ்வேகன் டியூகன் ஆகிய மாடல்களை பின்னுக்கு தள்ளி வெற்றிவாகை சூடியிருக்கிறது ஜாகுவார் எஃப்- ஃபேஸ்.

2017ம் ஆண்டின் சிறந்த வடிவமைப்பை கொண்ட கார்

இதுமட்டுமின்றி நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் மேலும் ஒரு மகுடமாக இந்தாண்டில் வடிவமைக்கப்பட்ட சிறந்த கார் என்ற பிரிவிலும் ஜாகுவார் எஃப்- ஃபேஸ் எஸ்.யூ.வி கார் அறிவிக்கப்பட்டது.

இந்த பிரிவில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் காருடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் கேப்ரியோல்ட் மற்றும் டொயோட்டா சி-ஹெ.ஆர் ஆகிய கார்கள் இறுதி சுற்று வரை சரிக்கு சரியாக போட்டியில் நின்றன.

2017ம் ஆண்டின் சிறந்த நகர்ப்புற கார்.

இந்த பிரிவில் இறுதிச்சுற்று வரை இடம்பெற்ற பி.எம்.டபுள்யூ ஐ3, சிட்ரோன் சி3 மற்றும் சூசிகி நிறுவனத்தின் இக்னிஸ் ஆகிய கார்களில், 2017ம் ஆண்டின் சிறந்த நகர்ப்புற காராக பி.எம்.டபுள்யூ ஐ3 அறிவிக்கப்பட்டது.

2017 உலகின் ஆடம்பர கார்

இந்த பிரிவில் பென்ஸ்- ஈ கிளாஸ் மாடல் விருதை தட்டி சென்றது. சிறந்த வடிவமைப்பை பெற்ற காருக்கான பிரிவில் வெற்றியை ஜாகுவார் எஃப்-பேஸ் காரிடம் விட்டுக்கொடுத்தாலும், ஆடம்பரம் என்ற வார்த்தையை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக பென்ஸ்- ஈ கிளாஸ் உலகின் ஆடம்பர காராக நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் தேர்வானது.

2017 சிறந்த செயல்திறன் பெற்ற கார்.

இந்தாண்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் காராக போர்ஷே நிறுவனத்தின் பெருமைக்குரிய படைப்பான பாக்ஸ்டர்/கேமன் தேர்வு செய்யப்பட்டது.

இதே பிரிவில் ஆடி நிறுவனத்தின் பெருமைமிகு அடையாளமாக பார்க்கப்படும் ஆர்8 ஸ்பைடர் மற்றும் மெக்லாரன் 570எஸ் போன்ற கார்கள் போர்ஷே பாக்ஸ்டருக்கு சரிநிகர் போட்டியை அளித்தன.

 

2017 சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெற்ற கார்

காரின் வடிவமைப்பு, செயல்திறன் போன்றவற்றை விட சுற்றுச்சுழலை மாசு ஏற்படுத்தாத படைப்புகளுக்கு தான் உலக மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரிவில் டொயோட்டா நிறுவனம் பிரையஸ் பிரைம் கார் தேர்வு செய்யப்பட்டது. இதில் செவர்லேவின் போல்ட் மற்றும் டெஸ்லா மாடல் எக்ஸ் போன்ற கார்களும் போட்டி பிரிவில் இடம்பெற்றிருந்தன.

 

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Jaguar’s first-ever SUV beats the Audi Q5 and Volkswagen Tiguan for the 2017 World Car Of The Year award. The F-Pace also won the World Car Design of the year award.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK