ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

Written By:

வாடிக்கையாளர் மத்தியில் ஆவலைத் தூண்டியிருக்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் விபரங்கள் கசிந்துள்ளன.

எந்தெந்த வேரியண்ட்டில் என்னென்ன வசதிகள் இடம்பெற்று இருக்கிறது என்பதை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

மொத்தம் 5 வேரியண்ட்டுகளில் இந்த புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்துள்ளது. கார்டாக் இணையதளம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின்படி, ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஸ்போர்ட், லான்ஜிடியூட், லான்ஜிடியூட் ஆப்ஷனல், லிமிடேட் மற்றும் லிமிடேட் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.

ஸ்போர்ட் வேரியண்ட்

அடிப்படை வசதிகள் கொண்ட ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் வேரியண்ட் பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் வருகிறது. இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஸ்போர்ட் வேரியண்ட்டில் 5 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16 இன்ச் அலாய் வீல்கள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ மிரர்கள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் வசதிகள் இடம்பெற்றிருக்கிறது.

ஸ்போர்ட் வேரியணட்டில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் போன்ற பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

லான்ஜிடியூட் வேரியண்ட்

லான்ஜிடியூட் வேரியண்ட் 2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறத்திலும், பின்புறத்திலும் பனி விளக்குகள், எஞ்சின் புஷ் பட்டன் ஸ்டார்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

லான்ஜிடியூட் ஆப்ஷனல் வேரியண்டும் டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும், 7 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

லிமிடேட் வேரியண்ட்

லிமிடேட் வேரியண்ட்டானது ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். கர்டெயின் ஏர்பேக்குகள், லெதர் இருக்கைகள், ரியர் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

லிமிடேட் ஆப்ஷனல் வேரியண்ட்டில் எச்ஐடி ஹெட்லைட்டுகள், கருப்பு வண்ண கூரை போன்ற கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

எஞ்சின்

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 160 பிச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்ல 1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும்.

வண்ணங்கள்

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி எக்ஸோட்டிகா ரெட், பிரில்லியன் பிளாக், மினிமல் க்ரே, ஹைட்ரோ புளூ மற்றும் வோக்கல் ஒயிட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

விற்பனைக்கு எப்போது?

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ஏற்கனவே டீலர்களில் முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் ரஞ்சன்கவுனில் உள்ள ஆலையில் உற்பத்தியும் துவங்கப்பட்டு இருப்பதால், அடுத்த மாதம் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஜீப் #jeep
English summary
American automaker Jeep is all set to launch its compact SUV, the Compass in India. Ahead of that the variants of the Compass have been revealed.
Please Wait while comments are loading...

Latest Photos